நீ
இரவை ஒதுக்கிய விடியல் நீ...
இருளை தழுவிய இரவும் நீ…
அர்த்தமற்ற அகராதி நீ…
அர்த்தம் பெற்ற கவிதையும் நீ…
நிலம் ஏந்தும் நிழல் நீ…
நிழலாகிபோன நிஜமும் நீ…
முரண்பாடாண முகவரி நீ…
முரண்டுபிடிக்கும் முற்றுப்புள்ளியும் நீ…
அறியாமையின் மிச்சம் நீ…
அறிய துடிக்கும் உச்சமும் நீ…
குடைக்குள் விழும் அடைமழை நீ…
குளிர்பார்வை தேடும் கதகதப்பும் நீ…
நினைவின் நீடிப்பு நீ…
நினையாத வேளையில் முளைப்பதும் நீ…
மறைக்க கூடிய இரகசியம் நீ…
மறைவில் உறங்காத வெளிச்சமும் நீ…
நிரப்பப்படாத காகிதம் நீ…
நிரம்பி வழிக்கின்ற கனவிலும் நீ…
கரையாத காத்திருப்பு நீ…
கரைசேர துடிக்கும் காதல் நீ…
கணக்கெடுக்காத என் அத்தனையிலும் நீ...
நீ மட்டுமே...