நீ என்னவள்

தொலைதூரம் தான் நீ
என்றாலும்

என் இதயத்தில் இடம்
பெற்றவளல்லவா

எனக்கு தெரியும் நீ
என்னவள்

யார் நம்மை பிரிப்பது
தூரமா

தோற்று விட்டது தூரம்
நினைவின் முன்

ஆம் இடைவெளி இன்றி
எப்பொழுதும்

நீ என்னையும் நான்
உன்னையும்

நினைத்துக் கொண்டே
இருக்கின்றோம்

தூங்கும் நேரம் கூட
கனவில்

எழுதியவர் : நா.சேகர் (4-Aug-19, 8:13 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee ennaval
பார்வை : 513

மேலே