மறந்து போ

#மறந்து போ

இதயத்தின் மையத்தில்
விழுந்த – அவள்
விழிதுளியை மறந்துபோ...

மார்கழி குளிரில்
உறைந்த பனிதுளியாய்
வார்த்தைகளுக்குள் தேங்கிய – அவளது
மௌனத்தை மறந்துபோ...

செவிகளுக்கு பழக்கப்பட்ட – அவளது
கொலுசின் முணங்களை
மறந்துபோ...

படித்த புத்தகத்தில்
கோடிட்டு பதுங்கிய
பிடித்த வரியாய் – அவளது
பிடிவாதத்தை மறந்துபோ...

கொட்டிய மழையில்
குடையாகிபோன – அவளது
புடவ முந்தானையை மறந்துபோ...

விழியில்
ஒரு வானவில்லாய் அப்பப்போ
விழித்துக்கொள்ளும் – அவளது
நாணத்தை மறந்துபோ...

விளக்கம் கேட்காமல்
விசாரணை நடத்தும் – அவளது
முன்கோபத்தை மறந்துபோ...

இருளுக்கும், இடிக்கும்
என் இம்சைகளுக்கு மட்டுமே
உதிக்கும் – அவளது
பயத்தை மறந்துபோ...

எதிர்ப்பார்க்காத வேளை
எதிர்பாராமல்
கன்னம் தொட்ட – அவளது
முதல் முத்தத்தை மறந்துபோ...

காரணமற்ற சண்டைகளுக்கு
அர்த்தமாக சமாதானம் சொல்லும் – அவளது
கண்ணீர்துளியை மறந்துபோ...

இத்தனையும்
மறதியின் பட்டியலில் நீள
இதில்
நீ மட்டும்
நழுவிவிட்டது
ஏனோ...


#கவிதை_கற்பனை_மட்டுமே

எழுதியவர் : ஸ்ரீதேவி (24-Nov-19, 9:45 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : maranthu po
பார்வை : 123

மேலே