காதல் சொல்ல வந்தேன் உன்னிடம் 555

உயிரானவளே...நீ என்னை கடந்து

செல்லும் நிமிடங்களில்...
உன் இருவிழிகளில்
நான் மூழ்கி போகிறேன்...
நாம் சேர்ந்து வாழபோகும்

வாழ்க்கையை நினைத்து...
எத்தனையோ
கனவுகள்
எனக்குள்...சிலஅடிகள் தொலைவில்

நீ என்னை கடந்தாலும்...
உன் முகம் பார்த்துபேச

முடியவில்லையடி...
என் மனதுக்குள் சிறுதயக்கம்

உன்னை காணும்போதெல்லாம்...
நாளைநாளை என்று உன்னையும்

காக்க வைக்கிறேன்...
நானும் காத்திருக்கிறேன்

என் காதலை உன்னிடம் சொல்ல...மனசெல்லாம் நீ இருந்தும்
சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்...
நாளை நீ சொல்லும் வார்த்தையில்

என் ஜீவன் வாழுமடி...
என் இதயம் முழுவதும்

இருக்கும் உன்னை...
அள்ளி அணைத்திட

ஆசையடி கண்ணே...
மல்லிகை

மொட்டு கொடுத்து...
உன்னை

மணந்துவிட ஆசை...
முல்லை மலரே முத்தம்

ஒன்று கொடடி நாளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Nov-19, 8:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 739

மேலே