பெண்

சில சமயங்களில்
தாயாகி போனவளுக்கும் தளர்வுண்டு
சகோதரியாய் பிறந்தவளுக்கும் சங்கடமுண்டு
தோழியாய் சிரிப்பவளுக்கும் தோல்வியுண்டு
காதலியாய் இருப்பவளுக்கும் காயமுண்டு
தாரமாய் வந்தவளுக்கும் தயக்கமுண்டு
மகளாய் வளர்பவளுக்கும் மறதியுண்டு

பிழைகள் இருந்தாலும்
பிடித்தமான கவிதையாய்
வாசிக்கும் போது
இனிப்பது பெண்ணிணமே...

உருவங்கள் வேறானாலும்
பிரதிபலிப்பு ஒன்றை...

பெண்களின்
எண்ணங்களையும் உணர்களையும்
மதிக்க வேண்டும் என்ற
கட்டாயமல்ல,
இவைகள் இருப்பதை
மறந்திடாத சமூகம் மட்டுமே
அவளது தேடலில்!!!

@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (8-Mar-19, 11:37 am)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : pen
பார்வை : 612
மேலே