பெண்ணியம் போற்றுவோம்

வாழ்வின் நுண்பொருளே
வீட்டின் நறுமணமே
வார்த்தையில் அக்கறைகாட்டி
வசந்தத்தில் தென்றலாய்
வாலிபத்தில் விருந்தாய்
வயதானதும் ஞாலமாய்
வலம்வரும் பெண்ணே

அருந்தனிப் பிறவியே
ஆருயிர் தோழியே
அன்பின் திருவுருவே
வாழ்நாள் அதிசயமே
பல்கலை வித்தகியே
இளகுமனம் கொண்டவளே
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (8-Mar-19, 10:53 am)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : penniam pootruvom
பார்வை : 4032

மேலே