அருண்மொழி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்மொழி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  29-May-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Feb-2016
பார்த்தவர்கள்:  1661
புள்ளி:  77

என் படைப்புகள்
அருண்மொழி செய்திகள்
அருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2022 10:06 pm

விடியற்காலையில் நல்லெண்ணெய்க் குளியல் முடித்து
புத்தாடை உடுத்தி மத்தாப்பு புன்னகையுடன்
அதிரசம் உண்டு வானவேடிக்கைகள் கண்டு
உறவும் நட்பும் உள்ளதை பகிர்ந்து
தீபங்களின் ஒளியால் தீமைகளை ஒழித்து
மனத்தில் நம்பிக்கை மலையென வளர்த்து
அன்பைப் பெருக்கி இன்பம் பொங்க
தன்னலம் துறந்து நேயம் போற்ற
இல்லம் சிறக்க இதயம் களிக்க
அல்லல் நீங்கி அறிவும் தெளிய
தளைகள் உடைத்து தளிர்க்கும் உணர்வில்
நிலையான மகிழ்ச்சி நித்தம் தொடரட்டும்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்

மேலும்

அருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2021 6:46 am

புண்ணிய பூமியில்
பூமணம் வீசவே/
எண்ணிய ஏந்திழை
ஏறுநடைப் போடவே/
நுண்ணிய நுண்திறமைகளை
நேரிழை கண்டிடவே/
கண்ணியம் காட்டிடுவே
கவலைகளைப் போக்கிடுவோம்/

மாசில்லா மங்கையினை
மண்ணுக்கு ஈந்தாயே/
மாசுகள் களைந்திட
வையகம் வாழ்த்துமே/
மாற்றங்களால் புவியிலே
ஏற்றங்கள் கண்டவளே/
குலம்காக்கும் கண்களாய்
எந்நாளும் போற்றிடுவோமே/

தேவதை உருவிலே
தாரகையாய் இருக்கின்றாய்/
தேர்ந்தவர் வேதமாய்
தேவியைப் போற்றுவார்/
பூக்களும் பூக்காதே
பூமகள் இல்லாமல்/
பூமியுமே என்றுமே
புன்னகைக்கு ஏங்குமே/

பாவையர் பார்த்திட
பூகோளம் கேட்க

மேலும்

அருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2021 10:35 pm

மார்கழி பனிப்பொழிவில்
மாக்கோலம் வாசலில்
பூசணி பூவெய்தி
பூமகள் மலர்ந்தாளே

உறவுகள் கூடி
உள்ளம் மகிழ்வோம்
தைப்பிறக்க வழிப்பிறக்கும்
தைமகளே விரைந்துவா

மஞ்சள் மணங்கமழ
மங்களம் உண்டாக
இனிக்கும் செங்கரும்பு
இன்பம் சேர்க்கட்டும்

உழவுத்தொழில் செழிக்க
உழவன் களிக்க
பஞ்ச பசிதீர்க்க
பகலவன் அருளால்

பச்சரிசி பாசிப்பருப்பு
பக்குவமா கொதிக்க
அச்சுவெல்லம் தட்டிப்போட்டு
அதிகாலையில் பொங்கவைப்போம்

நாட்டுக் காய்கறி
நால்வகை சமைத்து
வாழையிலையில் படையலிட்டு
வாயாரக் குலவையிட்டு

ஏர்தழுவி திளைப்போம்

மேலும்

அருண்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2021 12:32 am

விடியல் நமதாக
வித்தாரம் விருந்தாக
புலரி எழுந்தோங்க
புன்னகை எமதாக்கு
செவ்விது வழிந்தொழ
செறிவு வலுக்கட்டும்
எங்கும் இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
வயதறியா ஆசைகள்
வளமாக செழித்தோங்க
நோயற்ற பெருவாழ்வு
நோம்பின்றி கிட்டட்டும்
உரவம் உரமாக்கி
உயர்வை எட்டிடுவோம்
புத்தாண்டு பூக்கட்டும்
புகழொளி போர்க்கட்டும்

மேலும்

Super I like it very nice 04-Jan-2021 3:45 pm
அருண்மொழி - Dr A S KANDHAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2019 9:42 am

கசங்காத தாள் (நை மே 1 )

மடக்கி வைத்தால்
வலிக்கும் என்று

மணிபர்சில் கசங்காமல் வைத்து
ஆராதனை செய்த

பத்து ரூபாய் தாள்கள்
எனைப் பார்த்து கேலி செய்தன -

ஓர் அழுக்குப் பையில்
எட்டாய் மடிந்து வந்த

நூறு ரூபாய் தாளுக்கு
சில்லறை யாகிப் போன போது

மேலும்

அய்யா ஆவுடையப்பன் அவர்களுக்கு வணக்கம் .தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ... கவிஞன் (அ) படைப்பாளி , தன் படைப்பின் தாயாகிறான் .. தன் படைப்பு பேசப்படும் போதும் விமர்சிக்கப்படும் போதும் ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறான் .. தங்களின் அன்பான பாசமான முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன் ... 14-Apr-2019 11:23 pm
பதிவிட்ட. கவி அருண்மொழிக்கு நன்றி .... 14-Apr-2019 11:07 pm
மிகவும் ரசித்தேன் உங்கள் பத்து ரூபாய் தாளின் வலியை. நிதர்சன உண்மை வெவ்வேறு இடங்களில் நம் மரியாதை குறையும் என்று மிக அழகாக உரைத்தீர். 14-Apr-2019 9:36 pm
கவிதை பட்டறை அமைத்து தங்கள் நையாண்டி மேளம் இரு பாகங்களையும் படிப்போம் பகிர்வோம் விவாதிப்போம் இலக்கியமும் மருத்துவமும் நம் இரு கண்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் சித்திரை தமிழ் அன்னை ஆசிகள் 14-Apr-2019 7:40 pm
அருண்மொழி - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2019 9:39 pm

சித்திரைத் தாயே வருக
********************************************

சித்திரைத் தாயே சித்திரைத் தாயே
தோத்திரம் பாடியே உனையிங்கு அழைத்தோம்
இத்தரை மக்கள் வாழ்வு வளம்பெற
வித்திடு தாயே வேளாண்மை தொழிலுக்கு !

பூந்திரள் கொண்டுனை போற்றியே தொழுதோம்
மாத்திரை உண்ணும் நிலையது நீங்க
கோத்திரம் பலவுளும் சாத்திரம் ஒன்றாக்க
சித்திரைத் தாயே ஓடோடி வருக !

அலையாய் வருக அவனியது மகிழ
கலையாய்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 15-Apr-2019 9:21 am
ஆழமான சிந்தனை அழகான தமிழில். மிகவும் அருமை ஐய்யா 14-Apr-2019 9:26 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே 14-Apr-2019 7:59 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நன்னாடரே 14-Apr-2019 7:58 pm
அருண்மொழி - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2019 11:13 pm

மானிடர் செழிக்க
மலரும் தமிழ் ஆண்டே
நம்பிக்கை ஊற்று
நாடெங்கும் நடமாட விடு
மனிதம் போற்றும்
மனங்கள் மலரச் செய்
அன்பில் திளைக்கும்
அகிலம் உருவாக்கிக் கொடு
மதியழகில் மகுடஞ்சூடி
மதபேதம் ஒழியச் செய்
முளைக்கும் விதைக்கு
முழு வீரியம் கொடு
சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாக வருட விடு
இதமான தென்றலில்
இளைப்பாற நேரம் கொடு
மறவாமல் மாரி
மனதார பொழியச் செய்
நன்றிகள் சொல்ல
நாவிற்கு பழக்கிக் கொடு
பலமான நட்பு
பழுதாகாமல் பார்த்துக் கொள்
வளங்கள் யாவும்
வரமாக வாய்க்கச் செய்
நின்வரவால் நாடெங்கும்
நித்தம் நலம் கூட்டிடு
தமிழர் அனைவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மேலும்

Thanks for your feedback 14-Apr-2019 9:17 pm
ஐயா உங்கள் கருத்துதிற்கும் அறுமுகத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கவிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 14-Apr-2019 9:14 pm
ஐயா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. 14-Apr-2019 9:11 pm
முளைக்கும் விதைக்கு முழு வீரியம் கொடு...... வரவேற்போம் நலம் பெற. ,,,,, 14-Apr-2019 1:48 pm
அருண்மொழி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2019 9:07 pm

தமிழரின் முதல் நாள் , தைப்பொங்கல் திருநாள் ,

மேலும்

மிகவும் நன்றி ஐயா 17-Jan-2019 10:11 pm
அழகிய வண்ண ஓவியம் போற்றுதற்குரிய கவிதை வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள்,உழவர் தின நல் வாழ்த்துக்கள் 15-Jan-2019 11:34 am
மிகவும் நன்றி 15-Jan-2019 8:19 am
கவிதை அருமை👌உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 14-Jan-2019 9:56 pm
ப திலீபன் அளித்த போட்டியை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

மகளிர் தினப் போட்டி - 'யாதுமாகி நின்றாள்'

வணக்கம். 'யாதுமாகி நின்றாள்' - மகளிர் தினத்தை ஒட்டி ப்ரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.

காலமாற்றத்திற்கு ஏற்ப பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள்/மாற்றுக்கருத்துக்கள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் என பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு :

1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றை

மேலும்

வெளிநாட்டில் இருந்ததால் போட்டி பற்றி விபரமாகப் படிக்கவில்லை தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு நன்றி 26-Oct-2016 6:48 pm
போட்டி முடிவு பற்றி எழுதவும் நன்றி 26-Oct-2016 6:46 pm
போட்டி போற்றுதற்குரியது . அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள் . நன்றி 13-Apr-2016 5:05 pm
அருண்மொழி - அருண்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2016 6:50 pm

கிளியும் காக்கையும் காதல் கொண்டன
ஊடகங்களில் தான் எத்தனை ஆதரவு
சிறுபட்சி முதல் பருந்து வரை
பறவைக் கூட்டமெல்லாம் ஆரவாரம் செய்தன
ஆசி கூறி ஒப்புதல் அளித்தன

சிறுத்தையும் சிங்கமும் காதல் கொண்டன
முகநூலில் தான் எத்தனை பகிர்வுகள்
சுண்டெலி முதல் யானை வரை
தள்ளி நின்று ஆசீர்வாதம் செய்தன
வனமே வந்து வாழ்த்துக்கள் சொன்னது

பஞ்சநாகமும் கீரியும் காதல் கொண்டன
கண்கொட்டாமல் ரசித்தவர் எத்தனை பேர்!
ஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது
பாம்புகள் எல்லாம் படம் எடுத்து
காதலுக்கு பச்சைக் கொடி காட்டின

வண்ணத்துபூச்சியும் வெட்டுக்கிளியும் காதல் கொண்டன
அதில்தான் எத்தனை ஆனந்தம் பார்த்தீரோ!
சில்வண்டு முத

மேலும்

அருமையான எண்ணம் !!! சரி தான் அன்பே உலகத்தின் அஸ்த்திபாரம் அந்த அஸ்த்திபாரத்தை எதிர்த்தால் உலகம் இயங்குவது எங்கனம் !!! 21-Feb-2016 7:07 pm
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 19-Feb-2016 6:30 pm
நன்றி மு. ரா. அவர்களே 19-Feb-2016 6:27 pm
உங்கள் ஊக்கதிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி பழனி குமார் அவர்களே 19-Feb-2016 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

மலர்91

மலர்91

தமிழகம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Elakkiya Sundar

Elakkiya Sundar

Chennai
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (20)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ர த க

ர த க

Chennai
மேலே