பெண்களைப் போற்றுவோம்

புண்ணிய பூமியில்
பூமணம் வீசவே/
எண்ணிய ஏந்திழை
ஏறுநடைப் போடவே/
நுண்ணிய நுண்திறமைகளை
நேரிழை கண்டிடவே/
கண்ணியம் காட்டிடுவே
கவலைகளைப் போக்கிடுவோம்/

மாசில்லா மங்கையினை
மண்ணுக்கு ஈந்தாயே/
மாசுகள் களைந்திட
வையகம் வாழ்த்துமே/
மாற்றங்களால் புவியிலே
ஏற்றங்கள் கண்டவளே/
குலம்காக்கும் கண்களாய்
எந்நாளும் போற்றிடுவோமே/

தேவதை உருவிலே
தாரகையாய் இருக்கின்றாய்/
தேர்ந்தவர் வேதமாய்
தேவியைப் போற்றுவார்/
பூக்களும் பூக்காதே
பூமகள் இல்லாமல்/
பூமியுமே என்றுமே
புன்னகைக்கு ஏங்குமே/

பாவையர் பார்த்திட
பூகோளம் கேட்குமே/
பாவலர் பாட்டிலே
உன்னெழில் தோன்றுமே/
இன்பத்தின் துகிலாய்
இல்லறம் நிறைப்பவளே/
இன்னல்கள் தீரவே
பெண்களைப் போற்றுவோம்/

எழுதியவர் : அருண்மொழி (9-Mar-21, 6:46 am)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 145

மேலே