தோழி ஒருத்தியுடன்

நெடிது நீண்டு மினுக்கும் சடையில்
வாசம்மிகு வட்டப் பூவைச் சூட்டி
ஏற்றம் இறக்கமாய் எழில் நடையில்
தோழி ஒருத்தியுடன் வீதியில் நீ
அசைந்து வரும்போது சுழலும் புவியும்
சுற்றுதலை மறந்து நிலைத்து உன்னுடைய
எழிலைக் கண்டு மலைத்து பார்த்ததடி
ஆற்றில் நீ மூழ்கி குளிப்பதை பார்த்த
அழகில் வளர்ந்த ஆற்றோர சோலையின்
பூவினங்கள் யாவும் உன்னை காணவேண்டியே
ஒற்றைக் காலிலே நின்று தவஞ்செய்து
ஆவலில் ஆராவரமாய் உள்ளதடி பெண்ணே
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Mar-21, 9:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 249

மேலே