தமிழ் புத்தாண்டே வருக

மானிடர் செழிக்க
மலரும் தமிழ் ஆண்டே
நம்பிக்கை ஊற்று
நாடெங்கும் நடமாட விடு
மனிதம் போற்றும்
மனங்கள் மலரச் செய்
அன்பில் திளைக்கும்
அகிலம் உருவாக்கிக் கொடு
மதியழகில் மகுடஞ்சூடி
மதபேதம் ஒழியச் செய்
முளைக்கும் விதைக்கு
முழு வீரியம் கொடு
சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாக வருட விடு
இதமான தென்றலில்
இளைப்பாற நேரம் கொடு
மறவாமல் மாரி
மனதார பொழியச் செய்
நன்றிகள் சொல்ல
நாவிற்கு பழக்கிக் கொடு
பலமான நட்பு
பழுதாகாமல் பார்த்துக் கொள்
வளங்கள் யாவும்
வரமாக வாய்க்கச் செய்
நின்வரவால் நாடெங்கும்
நித்தம் நலம் கூட்டிடு
தமிழர் அனைவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (13-Apr-19, 11:13 pm)
பார்வை : 7513

மேலே