புத்தாண்டு வாழ்த்துக்கள்

அகமதி அற்றவள்...

ஆய்கம் கொண்டவள்...

இந்திரவில் நிறமிவள்...

ஈடணம் அழிவில்லாதவள்...

உவமித்தல் வேண்டாதவள்...

ஊதியொடுக்கம் ஆகின்றவள்...

எக்கழுத்தம் கொள்ளாதவள்..

ஏழ்கடலில் தேன்கடல் இவள்...

ஐவிரலில் தவழ்பவள்...

ஒயிலாய் நடையடையவள்...

ஓமுடிவு இல்லாதவள்...

ஔவை மொழியானவள்..

அஃதே தமிழானவள்...

இவளைக் கொண்டாடும் உலகுக்கு..

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

எழுதியவர் : காதம்பரி (13-Apr-19, 9:43 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 566

மேலே