தோம் தோம் தகிட தகிட தோம் தோம்
தோம்... தோம்... தகிட தகிட... தோம்... தோம்...
எதை எதையோ தேடினோம்...
எதை எதையோ கண்டு மயங்கினோம்...
யார் யாரிடமோ எதை எதையோ எதிர்பார்த்தோம்...
கிட்டா கனியென தெரிந்தும் மறக்கத் தயங்கினோம்...
மான் விழிகள் கண்டு மரித்தோம்...
மயில் நடனம் கண்டு பூரித்தோம்...
நா எச்சிலூற கண்டதையும் தின்றே செரித்தோம்...
தோம் ... தோம்... தகிட தகிட. ... தோம்... தோம்...
கவர்ச்சி என்னும் பாழுஞ்சிறை கைதியானோம். ..
கள்ளம்நிறை உள்ளத்தாலே கன்னித்தன்மை இழந்தோம்...
கருவி கருவியே கருவியாய் கருவினோம்...
உருகி உருகியே உருவை உருக்குலைத்தோம்...
நன்மை போற்ற தவறினோம்...
பரபரப்பை பாராட்டித் திரிவோம்...
பதறி பதறியே வாழ்ந்து சாவோம்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
