தோற்றவள்
உன் விழி ஒளி கதிரும்
உன் சிறு புன்னைகையும்
மண்டியிட வைத்துவிட்டது
புதைந்து கொண்டிருக்கும்
என் உயிரை
உன் இதழ் ஈரம் துடிக்க வைக்கிறது
என் உலகத்தில்
உன்னை அடக்க
மாறுகிறது மனம்
தெரியவில்லை
நான்
என்னுள் தோற்று போனேனா
இல்லை
உன்னுள் தோற்றேனா