கசங்காத தாள் நை மே 1

கசங்காத தாள் (நை மே 1 )

மடக்கி வைத்தால்
வலிக்கும் என்று

மணிபர்சில் கசங்காமல் வைத்து
ஆராதனை செய்த

பத்து ரூபாய் தாள்கள்
எனைப் பார்த்து கேலி செய்தன -

ஓர் அழுக்குப் பையில்
எட்டாய் மடிந்து வந்த

நூறு ரூபாய் தாளுக்கு
சில்லறை யாகிப் போன போது

எழுதியவர் : Dr A S KANDHAN (13-Apr-19, 9:42 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 70

மேலே