திடீரென பெய்த மழை

வானம் ஓவியம்
வரைந்து கொண்டிருக்கிறது
தூரிகை கொண்டு
கருமையை முழுவதுமாய்
பூசி விட்டு
சுற்றி வர
பொட்டு பொட்டாய்
நடசத்திர வடிவில்
புள்ளிகள் வைத்து
மின் மினுப்பாக்கி
நடுவில் ஒரு
இளம் சிவப்பு
வட்ட பொட்டு
ஒன்றையும் பதிய வைத்து
அதனையும்
ஒளிர வைத்து
அழகு காட்டி கொண்டிருக்கும்
போது..!

பொறாமையால்
பொங்கிய
காற்று கூட்டங்கள்
எங்கிருந்தோ கருமை நிற
மேகங்களை இழுத்து
வந்து
அதன் மடியில்
இருந்த
நீரை பொழிய
வைத்து அத்தனையும்
கழுவி
அழித்து கொண்டிருக்கிறது

எதிர்த்து கேட்ட
வானத்தின் மீது
மின்னலை இறக்கி
மிரட்டி
கொண்டிருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-25, 11:20 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 30

மேலே