மோன நிலை
மோனநிலை எய்திட ஊன் வருந்த
கானம் சென்று கடுந்தவம் புரிந்திடலும்
வேண்டாம் நம் வீட்டில் மழலைப்பேசும்
குழந்தையுடன் பேசிப்பழகி அதன் குணம்
தெரிந்துகொண்டால் மழலையாய் அன்றிருந்த
நீ இன்று எங்குபோய்விட்டாய் என்பது தெளிய
மோனா நிலை உன்னைத்தானே வந்துசேரும்.