சேர்ந்திருப்போம்

சேர்ந்திருப்போம்.
05 / 07 / 2025


விழியில் விழுந்து என்
இதயம் நுழைந்தாய் பெண்ணே
இதயம் நுழைந்து என்
உதிரம் கலந்தாய் கண்ணே
பல்லவன் வடித்து வைத்தான்
கற்சிலை
உன்வடிவம் கண்டு நான் ஆனேன்
கற்சிலை
உன் மூச்சு காற்று பட்டவுடன்
உயிரானேன்
உன் பேச்சு காதில் கேட்டவுடன்
கவியானேன்
சித்தன்ன வாசல் ஓவியமே - என்
சித்தம் கவர்ந்த காவியமே
மொத்தமாய் என்னை தந்தேனே - என்
சொத்துசுகம் முழுதும் நீதானே
வா வா பெண்ணே கைகோர்ப்போம்
வாழ்க்கை முழுதும் வாழ்ந்திருப்போம்
வாடிய பயிருக்கு நீர் வார்ப்போம்
வாட்டங்கள் போக்கியே சேர்ந்திருப்போம்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Jul-25, 9:01 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : sernthiruppom
பார்வை : 75

மேலே