Elakkiya Sundar - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Elakkiya Sundar
இடம்:  Chennai
பிறந்த தேதி :  04-Jun-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2017
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  14

என் படைப்புகள்
Elakkiya Sundar செய்திகள்
Elakkiya Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2019 6:32 am

துரியோதனின் தந்திரம் , கிருஷ்ணரின்

தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது .

எந்த ஆயுதம் கொண்டு எனை தாக்குகிறாயோ ,

அதே ஆயுதம் கொண்டு உனை தாக்குவேன் -இது புராண சான்று.

ப(கையா)ங்காளியே !!

மறைந்திருக்கும் சகுனியே!!!

நாட்களை எண்ணிக்கொள் ....

"திருப்பி அடிப்போம் "

மேலும்

சிறப்பு 18-Feb-2019 7:42 am
Elakkiya Sundar - ராஜேஷ் லிங்கதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2018 1:20 am

குழந்தைகள் உலகம்

ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும்.

குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தமுறையில் நம் சமுதாயத்தை எ

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி. 05-Jun-2018 4:58 pm
அருமை !!! இன்றைய தேவை என்னவென்று எளிதில் இளம் பெற்றோர் மனதில் ஆழமாக பதிய வைத்து வைத்துவிட்டிர்கள் !!! 05-Jun-2018 4:28 pm
மிக்க நன்றி. மேலும் இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் படைப்பதற்கு எத்தனிக்கிறேன். 03-Jun-2018 12:56 am
போற்றுதற்குரிய அரிய படைப்பு அறிவுரைகள் புது யுகம் கண்ட மாற்றங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் விழிப்பு உணர்வூட்டும் புது யுகம் போற்றும் கட்டுரைகள் 02-Jun-2018 4:39 am
Elakkiya Sundar - Elakkiya Sundar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2018 5:40 pm

பெண் - பலவீனமான இனமா ? இந்த கேள்விக்கு எந்த ஆணும் நிச்சயம் விடை கூற இயலாது . இந்த கேள்விக்கான விடை ஒவ்வொரு பெண் மனத்திலும் உண்டு.

கல்லூரி படிப்பு முடித்து ஒரு முழு சமூகத்துக்குள் அவள் நுழையும் போது , பாரதியின் "புதுமை பெண்" மனதிலும், அவன் "கம்பிர மேசை "முகத்திலும் படரவே , அடி எடுத்து வைக்கிறாள். இந்த சமூகத்தின் இருட்டு முகம் கொஞ்சம் கொஞ்சமாக களையும் போது, தன் மனதை உறுதியாகவே மெருகேற்றுகிறாள்.

திருமணம் என்ற நிலை வரும் போது ஏற்படும் சில ஏற்ற இறக்கங்களை கடத்தும் வருகிறாள் . அதுவரை இவள் ஒரு இரும்பு பெண்மணி . பெண் பிள்ளையின் தாய் என்ற நிலை தான் அவளை உண்மையில் அடையாளம் காட்டுகிறது .அந

மேலும்

நன்றி !!! தங்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது !!! 05-Jun-2018 4:17 pm
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே !!! உங்கள் கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். " பெண்ணின் வலிமையை உணர முடியாது" என்பது என் கருத்து அல்ல. ஆணின் பலம் பெண்ணிற்கு பலவீனமாகவும் , பெண்ணின் பலம் ஆணுக்கு பலவீனமாக இருப்பது இயற்கை. எந்த இடத்திலும் பலத்தை கொண்டு ஆளும் போது, தாய்மை சற்று மனதை இளக செய்கிறது என்பது உண்மையே . நீங்கள் கூறுவது போல் "ஒரு பெண் தாயாகும்போதுதான், தனது வலிமையின் உச்சத்தில் இருக்கிறாள்" . இந்த நிலை , பலவீனத்தை உணர்ந்து , இந்த சமூக அவலங்களை உணர்ந்து , தன்னை மெருகேற்றி கொண்டதின் உச்சம். இந்த மனக்கவலை உருவாகாமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு சமூக பிரஜையின் கடமை !!! நன்றி !!! 05-Jun-2018 4:16 pm
போற்றுதற்குரிய இலக்கியம் பாராட்டுக்கள் ---------------------- பெண்கள் அன்று இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும் பல ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை, உணர்வு ரீதியான அத்துமீறல் என்பவை குழந்தைகள் சந்திக்கும் சில வகையான அத்துமீறுதல்களாகும் குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றி--- சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் . . 31-May-2018 6:18 pm
தங்கள் கருத்துக்களைப் பாராட்ட விழைகிறேன். அதே நேரம், ஆணால் பெண்ணின் வலிமையை உணர முடியாது என்பதை மறுக்கவும் விரும்புகிறேன். மேலும், ஒரு பெண் தாயாகும்போதுதான், தனது வலிமையின் உச்சத்தில் இருக்கிறாள் என்பதை உணருங்கள். தனியாக ஒரு குடும்பத்தைக் கட்டிக்காக்கும் வலிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்பாகவே இருக்கிறது, அதுவே ஆண்களால் முடியுமா என்பது ஐயம்தான். வேலைப்பளுவையும் சுமந்து கொண்டு, குடும்ப பாரத்தையும் சுமந்து நிற்கும் மனவலிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு. ஒரு ஆணாக, எனது, அக்காள், தங்கை, மனைவி என்று எல்லோரிடமும் இந்த வலிமையை உணர்ந்ததால் சொல்கிறேன். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது ஒரு சமூகத்தின் அவலம் என்றே சொல்லலாம். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, சம அளவில் ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். குழந்தைகளை சீரழிக்கும் அந்த மிருகங்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழிப்பது அரசாங்கத்தின் கடமை. பாலியல் தொல்லைகளிலிருந்து எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று பயிற்சியளித்துக் குழந்தைகளைக் காப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. விழுப்புணர்வுக் கட்டுரைக்கு வாழ்த்துக்கள். இது தொடர்பாக நானும் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அதைக் கூடிய விரைவில் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 30-May-2018 7:07 pm

02-Feb-2018 7:45 pm

அதிகாலை துயிலழுந்து ,

ஆற அமர அறுசுவை படைக்கும் பழக்கமற்று ,

அரை மணி நேரத்தில்

ஆறு பதார்த்தம் செய்து,

அரைகுறையாய் புசித்து ,

ஆறு போல் பாய்ந்தோடி ,

அலுவலக பணியாற்றும் ,

ஆற்றல் மிக்க அவள் .....

மேலும்

நன்றி !!! 29-May-2018 4:36 pm
ஒரு பெண்ணால் நிறைவேற்றப்படும் பொறுப்புக்கள் எல்லாம் ஆண்களால் தவறவிடப்பட்ட கடமைகளாகவும் இருக்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:50 pm
Elakkiya Sundar - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்

மேலும்

தமிழன் நாடாளும் நாள் தமிழினம் (DivyaPrakash56) முதல் பரிசு 30-Oct-2018 11:14 am
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா அதை எங்கு காண 20-Mar-2018 4:38 pm
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ? 17-Mar-2018 4:58 pm
போட்டியில் எப்படி கவிதையை சேர்ப்பது? 15-Mar-2018 9:21 am
Elakkiya Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2018 1:56 pm

தமிழன் நாடாளும் நாள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!

இது வன்முறை அல்ல. வீரத்தின் வெளிப்பாடு.

அரசர்களளெல்லாம் ஆண்டவன் போல் மக்களை காத்தனர் .

"நிர்வாக திறனுக்கு கல்லணை, கட்டிட கலைக்கு தஞ்சை பெருவுடையார் கோவில் , சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மொழியுணர்வு " என அவன் ஆண்ட பெருமை சொல்ல எத்தனையோ.

தமிழன் நாடாளும் நாள் ?

ஆண்ட பரம்பரைக்கு ஆச்சர்ய கேள்வி தான் . இந்த கேள்வி எனக்குள் எத்தனையோ கேள்வியை விதைக்கிறது.

இதில் " நாடு " என்பது தமிழ் மாநிலமா அல்லது பாரதமா ?

தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற ஒரு கூட்டம் ,

தனி தமிழ்நாடு கோரிக்கையோடு ஒர

மேலும்

Elakkiya Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 8:23 pm

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!

இது வன்முறை அல்ல. வீரத்தின் வெளிப்பாடு.

அரசர்களளெல்லாம் ஆண்டவன் போல் மக்களை காத்தனர் .

"நிர்வாக திறனுக்கு கல்லணை, கட்டிட கலைக்கு தஞ்சை பெருவுடையார் கோவில் , சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மொழியுணர்வு " என அவன் ஆண்ட பெருமை சொல்ல எத்தனையோ.

தமிழன் நாடாளும் நாள் ?

ஆண்ட பரம்பரைக்கு ஆச்சர்ய கேள்வி தான் . இந்த கேள்வி எனக்குள் எத்தனையோ கேள்வியை விதைக்கிறது.

இதில் " நாடு " என்பது தமிழ் மாநிலமா அல்லது பாரதமா ?

தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற ஒரு கூட்டம் ,

தனி தமிழ்நாடு கோரிக்கையோடு ஒரு கூட்டம் ,

என பல சித்தாந்

மேலும்

Elakkiya Sundar - Elakkiya Sundar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2018 4:38 pm

                     பெண்ணியம் -ஓர் சித்தாந்த தேடல்                                                 நாணயத்தின் இரு பக்கத்தை போல் , பெண்ணையும் குறித்த புரிதல் இரு வேறாக இருப்பதாக உணர்கிறேன் . என் சிந்தனை சற்று பின்னோக்கி போகிறது . " ஒரு பக்கம் அவ்வையாரை பார்த்து வியக்கிறது , மறுபக்கம் பெண்கள் உடன்கட்டை ஏறுவதையும் பார்க்கிறது ". வேலு நாச்சியாரின் நேரத்தை பார்க்கும் அதே வேளை உணர்வற்ற அடிமைகளாக ஒரு பக்கம் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது ". ஆம்! .  பெண்கள் சமமாக அங்கீகரிங்கப்படவில்லை .
                         கல்வி , விதவை மறுமணம் , சொத்துரிமை  போன்றவை மறுக்கப்பட்டிருந்தது .அவள் உணர்வுகள் இந்த ஆணவ சமூகத்தால் நசுக்கபட்டிருக்கிறது . 
               " பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
                  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் "
 என்ற பாரதியின் கனவு மெய்ப்பட்டுவிட்டதா என்ற சிந்தனை தேடல் இது ?

                   பள்ளி , கல்லூரி ,அலுவலகம் , அரசியல் ,கலை,அறிவியல் ,ஊடகம்  என பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு உள்ளது . நினைத்தது போல் உடை அணிகிறோம் . பெண் சிசு கொலைகள் சற்று குறைந்திருக்கிறது.  பழைய நிலையிலிருந்து நாம் சற்று முன்னேறி இருக்கலாம் . அவளுக்கு இழைக்க பட்ட  கொடுமை என்பது உடல் ரீதியாக என்பதை தாண்டி , உணர்வு ரீதியானது. ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை ஏன் வந்தது ? அவள்  உணர்வுகள்  மதிக்க படாததனால் தான் . அவள் உணர்வுகள் மதிக்க படும் போது தான் நான் உண்மையான விடுதலை அடையமுடியும் . சரி ! அப்படியெனில் , இன்று நம் நிலை என்ன ?
           ஆண் சமூகம் அதிகம் ஆக்ரமித்து உள்ள அரசியல் துறையில் , ஒரு ஆணை கொள்கை ரீதியாக  விமர்சிக்கும் இச்சமூகம் ஒரு பெண்ணை எப்படி எதிர்கொள்கிறது . அவள் வாதத்தில் உள்ள வலிமையை விமர்சிக்காமல் , " அவள் செல்வி யா , திருமதியா " , " அவள் அழகு இயற்கையா,ஒப்பனையா" , " அவள் சிகை ஏன் இப்படி உள்ளது , ஏன் இப்படி உடை அணிகிறாள் " என அவள் சொந்த வாழ்க்கையை  தோண்டும் கோழை சமூகம் .   

நாட்டை ஆளும் ஒரு ஆளுமைக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம் இல்லையா ? என்று சிலர்  கேட்கலாம் . கைகூப்பி வணங்கி ஏற்கிறேன் நண்பர்களே . நிச்சயமாக தேவை தான் . என்னுடைய கேள்வி ,  தனி மனித ஒழுக்கம் பெண்ணிற்கு மட்டும் தானா ? ஆணுக்கு பொருந்தாதா ? 

  ஆண் அரசியல் தலைவர்கள் ," ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடோடு   தான் வாழ்கிறார்களா ? ஏன் இந்த ஒரு சார்பு நிலை ?            

                     "கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,
                       இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் " 
என்ற பாரதியின் கனவு உருப்பெறவில்லையே !!  

  கலைத்துறை - பெண்கள் வியாபார பொருளை மாறிய ஒரு மாயா சந்தை அது. கலை என்ற பெயரில் நாகூசும் வசனங்கள் , கண்  கூசும் காட்சிகள் . இந்த எல்லா வக்ரங்களிலும் பெண்ணின் உடலே மூலதனம் .      அந்த மேல்தட்டு உலகில் மற்ற எல்லா துறைகளை காட்டிலும் அதிக ஊதியம்  ஏன் ? அவள் திறமைக்கா ? நிச்சயம் இல்லை . அவள் அங்கங்கள் அங்காடி பொருளாய் வியாபார படுத்த பட்டதற்கு . இருப்பினும் ஆண் நடிகர்களுக்கு இணையான ஊதியம்   இல்லை . அக்காலத்தில் ஆன் ,பெண் இடையே இருந்த ஊதிய வித்தியாசம் இன்று சற்று உரு மாற்றி கொண்டு உலவுகிறது.

   " போலீஸா இருந்தாலும் நீ பொம்பள , குற்றவாளியா இருந்தாலும் அவன் ஆம்பள "
 என்று பிற்போக்கு தனத்தை விதைக்கும் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது .  

  பெண்கள் போக பொருளாய் நடத்த படுவதற்கு ஆண் சமூகம் மட்டும் தான் காரணமா ? அந்த துறை பெண்களுக்கு சம அளவு பங்கு உள்ளது .இவர்கள்   பிற்போக்கு வசனங்களை எதிர்க்கவில்லை . சம ஊதியம் பெற போராடுவதில்லை . திரை  வாய்ப்புக்காக தன்னை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழவில்லை . தன் சுய முன்னற்றத்திற்க்காக அவற்றை ஏற்று கொண்டு ( சகித்து கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டாம் . நிச்சயம் அந்த வார்ததைகளை நான் கையாளமாட்டேன் ) தனக்கு திரைச்சந்தை கை கொடுக்காது என்ற நிலை வந்த பிறகு , 40  வயதுக்கு மேல் , இவர்களெல்லாம் திடீர் பெண் போராளிகள் ஆகிவிடுகிறார்கள் .

  பெண் குழந்தைகளை பள்ளி கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் போது " தைரியமாக சென்று வா " என்ற சொல்வதில்லை . மாறாக ," பாத்து பத்திரமா போய் வாம்மா " என்ற பேச குரல் ஒலிக்கிறது . மேலோட்டமாக பார்த்தால் இரண்டும் ஒரே  அர்த்தம் தான் . உண்மையில் ஆயிரம்  வித்தியாசம் . முதல் வரியில் தன்நம்மிக்கையும் , இரண்டாவது வரியில் ,பலவீனமான இனம் என்ற அவநம்பிக்கையும் அளிக்கிறோம் .

படித்து முடித்தவுடன் திருமணம் அல்லது அரை மணி நேரத்தில் பொய் வரும் தூரத்தில் , அவள் திறமைக்கு சற்றும் ஒத்து வராத ஏதோ ஓர் வேலை . ஒரு வழியாக தடைகளை தகர்த்தெறிந்து , முட்டி மோதி உயர் பதவியை அடையும் ஒரு பெண் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வகித்தால் அதற்கு பெயர் அதிகார திமிர் .  

                       வரதட்சிணை முழுமையாக ஒழியவில்லை.   லட்சங்களில் ஊதியம் பெறும் மாப்பிள்ளைகள் கூட , தன் வீட்டு செலவுகளை மாமனார் , மைத்துனர்கள்  செய்ய வேண்டும் என்ற மனோபாவம் கொண்டு  உள்ளனர்  .அந்த நேரத்தில் இரு தலை கொல்லியாக இருக்கும் அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை. இது போன்ற மாப்பிள்ளைகளை கைகூப்பி வணங்கி பெண் கொடுக்க முன் வர  நம் சமூகத்தில் பஞ்சம் இல்லை .
                             " தன் மகள் சுய கெளரவதோடு வாழ்வதை விட , 
                               சுக போகமாக வாழ்வதை விரும்பும்  முட்டாள் கூட்டம் ".
மறுமணம் செய்ய நினைக்கும் ஆண் , தன்னை விட இளமையான பெண்ணை அவள் வறுமையை காட்டி திருமணம் செய்து கொள்கிறான். ஆனால், ஒரு பெண் மறுமணம் செய்ய நினைத்தால் , அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது    . தன் வயதுக்கு சற்றும் ஒத்து வராத வரனாக இருத்தலும் ஏற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஆண் மகன் இவளுக்கு  கொடுக்கிறானாம் . இந்த பிற்போக்கு தன  நீதியை பிரகடன படுத்தி அதை " மறுமலர்ச்சி" என்று சொல்கிறது இந்த பேதை சமூகம் .  அவள் வாழ்க்கையை அவளுக்கு கொடுக்க நீ யாரடா மூடனே ?

          இப்பொழுது நான் உரக்க சொல்வேன் பெண்ணியம் குறித்த புரிதல் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இல்லை என்று . அது சரி ! பெண்ணியம் பற்றிய புரிதல் பெண்ணிற்கு உள்ளதா ?

                             " காலை சமையல் உனது , மாலை எனது ,

                                 நீ மது உட்கொண்டால் நானும் உட்கொள்வேன் 

                                 நீ நட்சித்திர விடுதியில் நடு   இரவு  வரை ஆட்டம் போட்டால் நானும் போடுவேன்"

என்று அவர்கள் தவறுகளில் பங்கெடுக்கும் ஆபத்தான மனோபாவம் ஒரு பக்கம் வளர்ந்து கேடே உள்ளது .
                 குட்ட குட்ட குனியும் போது நீ அடிமை வம்சமாகிவிட்டாய்.அறிவார்ந்த சிந்தனையோடு பொங்கி எழாமல் , முட்டாள்தனமான எதிர்மறை சிந்தனையோடு நீ எழ முற்பட்டால் உன்னை அடிமை வம்சமென சாசனப்படுத்திவிடுவார் .
                                  சமயலறையில் சம உரிமை தேடாமல் , ஆண்களின் தவறுகளை அச்செடுக்கமால் , பெண்ணிற்கு உரிய தாய்மையை விட்டு கொடுக்காமல் , 

                             " அன்பு கொடுக்கும் அம்மா , 
                                அறிவு கொடுக்கும் அப்பா "

 என்பதை உடைத்தெறிந்து ,
                                " அன்பும் , அறிவும் கொடுக்கும் அம்மா ,அப்பா " 
 என்பதை நோக்கி செல்வதே  சம உரிமை .

               " சம உரிமை கேட்ட குல மகளே ,
                  விழித்தெழு !
                  உன் உணர்வு உரு பெறும் வரை 
                  நீ சிறைப்பறவை !
                  பெண்ணிற்கு அளிக்கும் உரிமை 
                  கலாச்சார சீரழிவின் தொடக்கம் 
                   என்ற சொல்லை உடைத்தெறி !"

                        ஆணாதிக்க சமூகமே ,
                        எச்சரிக்கை !
                         அறிவார்த்த பாரதி கண்ட 
                         புதுமை பெண்ணும்  ஒரு பக்கம் 
                         வேகமாக வளர்கிறது !!

   மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பா விஷ்ணு

பா விஷ்ணு

சிதம்பரம்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பா விஷ்ணு

பா விஷ்ணு

சிதம்பரம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
பா விஷ்ணு

பா விஷ்ணு

சிதம்பரம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே