பதுமை - பலவீனம்ம்

பெண் - பலவீனமான இனமா ? இந்த கேள்விக்கு எந்த ஆணும் நிச்சயம் விடை கூற இயலாது . இந்த கேள்விக்கான விடை ஒவ்வொரு பெண் மனத்திலும் உண்டு.

கல்லூரி படிப்பு முடித்து ஒரு முழு சமூகத்துக்குள் அவள் நுழையும் போது , பாரதியின் "புதுமை பெண்" மனதிலும், அவன் "கம்பிர மேசை "முகத்திலும் படரவே , அடி எடுத்து வைக்கிறாள். இந்த சமூகத்தின் இருட்டு முகம் கொஞ்சம் கொஞ்சமாக களையும் போது, தன் மனதை உறுதியாகவே மெருகேற்றுகிறாள்.

திருமணம் என்ற நிலை வரும் போது ஏற்படும் சில ஏற்ற இறக்கங்களை கடத்தும் வருகிறாள் . அதுவரை இவள் ஒரு இரும்பு பெண்மணி . பெண் பிள்ளையின் தாய் என்ற நிலை தான் அவளை உண்மையில் அடையாளம் காட்டுகிறது .அந்த உயிர் நம்மை பலவீனப்படுத்திவிடுகிறது . யார் காரணம் ? இந்த சமூகமே !!!

பருவமடைந்த பெண்ணிற்கு பாதுகாப்பு அவசியம் என்ற நிலை மாறி , பிறந்த குழந்தை பெண்ணாக இருப்பின் , அந்த சிசுவிற்கும் பாதுகாப்பு தேவை என்ற அருவெறுப்பான முதிர்வை இந்த சமூகம் அடைந்திருக்கிறது.

வன்புணர்வு உடல் ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல . அது உணர்வுக்கு எதிரான மிக பெரிய போர். அராஜகத்தின் உச்சம் .

ஆசிரியரை நம்பி பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை , பேராசிரியரை நம்பி கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை . சக ஊழியரை நம்பி , அலுவலகம் அனுப்ப முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரரை நம்பி விளையாட அனுப்ப முடியவில்லை.

மகள் இந்த உலகில் சாதிக்க வேண்டும் என்பதை விட , இந்த மனிதமற்ற மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதே பெரும் வேலையாக உள்ளது .

பெண்ணே !!
மனதில் உறுதி கொள் !!

மகள்களுக்கு ,
நடனத்தின் நளினத்தை விட,
பயணத்தின் பாதுகாப்பு யுக்தியை கற்று கொடுப்போம்

பயத்தை பயிற்சி கொண்டு அழிப்பதே வீரம் .

பலவீனத்தை பலமாக்குவோம்

அனைத்திற்கும் மேல் ,

" நம் மகன்களை மாசற்ற மனதோடு வளர்த்து ,

இச்சமுகத்துக்கு அளிப்போம் ".

எழுதியவர் : (29-May-18, 5:40 pm)
சேர்த்தது : Elakkiya Sundar
பார்வை : 136

மேலே