தமிழன் நாடாளும் நாள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!

இது வன்முறை அல்ல. வீரத்தின் வெளிப்பாடு.

அரசர்களளெல்லாம் ஆண்டவன் போல் மக்களை காத்தனர் .

"நிர்வாக திறனுக்கு கல்லணை, கட்டிட கலைக்கு தஞ்சை பெருவுடையார் கோவில் , சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மொழியுணர்வு " என அவன் ஆண்ட பெருமை சொல்ல எத்தனையோ.

தமிழன் நாடாளும் நாள் ?

ஆண்ட பரம்பரைக்கு ஆச்சர்ய கேள்வி தான் . இந்த கேள்வி எனக்குள் எத்தனையோ கேள்வியை விதைக்கிறது.

இதில் " நாடு " என்பது தமிழ் மாநிலமா அல்லது பாரதமா ?

தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற ஒரு கூட்டம் ,

தனி தமிழ்நாடு கோரிக்கையோடு ஒரு கூட்டம் ,

என பல சித்தாந்தத்தோடு இருக்கும் கூட்டத்தின் நடுவில் ,
என் இனத்தை ஒரு வட்டத்துக்குள் சுருக்காமல், இந்த அகண்ட பாரதமே என் நாடு என்று புரிதலோடு இருக்கும் ஒரு தமிழச்சியின் எளிய சிந்தனை இதோ ..

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தோம் ,

இன்று பணம் எடுக்கும் எந்திரம் (ATM ) ,

select your preferred language என்று கேட்கும் போது English என்று தேர்ந்தேடுக்கிறோம் .

ஆனால் , எங்கும் தமிழ் எதிலும் என்று மட்டும் முழங்குகிறோம்.

"கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி " என்ற இத்தாலியர் தமிழ் மீது பற்று கொண்டு ,அவர் புரிந்த தமிழ் சேவை எண்ணற்றவை . அவர் ஆற்றிய தமிழ் தொண்டை நம் சமூகம் அங்கீகரித்து ,அவரை தமிழராகவே போற்றியது .

அவர் வேறு யாரும் அல்ல , "தேம்பாவணி" இயற்றிய "வீரமாமுனிவர்".

அவரை தமிழர் அல்ல என்று நம் முன்னோர்கள் புறம் தள்ளி இருந்தால், மகத்தான ஒரு தமிழ் பற்றாளரை இழந்ததோடு , மிக பெரிய வரலாற்று பிழையை இச்சமூகம் செய்திருக்கும் .

இது நம் முன்னோர்களின் பக்குவத்தை பறைசாற்றியிருக்கிறது .

இன்று நாமோ, ஒருவரின் பிறப்பை வைத்து தமிழரா இல்லை வெளி மாநிலத்தவரா என்ற ஆராய்ச்சிக்கு முற்படுகிறோம் .

ஒருவன் வேறு எங்கோ இருந்து நம் மாநிலத்தில் வந்து , தமிழ் கற்று , தமிழ் மக்களோட இணைத்து வாழ முற்பட்டால் , அதை அரவணைக்காமல் பிரிவினைவாதம் பேசுகிறோம் . இது ஒரு நல்ல அடையாளத்தை நமக்கு அளிக்காது .இது போன்ற எண்ணங்கள் சில தனி பட்ட சுயநலமான நபர்களால் திணிக்க படுவது .

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்ற பெருமிதம் வெற்று சொல்லாகிவிடும் . சிலர் கேட்கலாம் , வாழ வைப்போம் என்று தான் சொன்னோமே ஒழிய ,ஆள வைப்போம் என்று சொல்லவில்லை .

ஏதோ ஒரு நாட்டில் நம் தமிழன் மந்திரி ஆனான் என்ற செய்தி கேட்டு நாம் பெருமை கொள்கிறோம் . சற்று சிந்தியுங்கள் .அந்த நாட்டில் அவன் இனத்தவன் தான் ஆள வேண்டும் என்ற மனோபாவம் இருந்தால் , நம் தமிழன் ஒருவன் பெருமைமிகு பதவியில் அமர்ந்திருக்க மாட்டான் அல்லவா ??


வேற்று இனத்தவன் ,நம்மோடு வாழ்ந்து , நம் சுக துக்கங்கள் புரிந்து , நம் நன்மைக்கு போராட நினைத்தால் ,அவனை தமிழன் என்று ஏற்று ஆள வைப்போம் . தவறில்லை .
இல்லையேல் , பிறப்பை வைத்து அதாவது ஜாதி அடையாளம் வைத்து தமிழனை அடையாளம் காணும் அவல நிலை தோன்றும் .

திரை கடல் தேடி திரவியம் தேடு என்ற நம் முன்னோர் வழியில் , நம் தேடல் விரிவடையட்டும் . திறந்த மனதோடு ,அணைத்து மொழியும் கற்போம், தாய் மொழியை போற்றுவோம் .

அணைத்து கலாச்சாரத்தையும் மதிப்போம் , நம் கலாச்சாரத்தை "பின்பற்றி" காப்போம் !!!

தமிழன் வீரம் , பெருமை , கலாச்சாரம்,பெருந்தன்மை காவிய வடிவில் அணைத்து மொழியிலும் , அணைத்து இனங்களுக்கும் கொண்டு செல்வோம் .

தமிழின் பெருமையும் , தமிழன் பெருந்தன்மையும் எட்டு திக்கும் பரவட்டும் !!!

அகண்ட பாரதம் ஆளும் நாள் விரைவில்..........

எழுதியவர் : Elakkiya Sundar (15-Mar-18, 8:23 pm)
சேர்த்தது : Elakkiya Sundar
பார்வை : 253

மேலே