எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணியம் -ஓர் சித்தாந்த தேடல் நாணயத்தின் இரு பக்கத்தை...

                     பெண்ணியம் -ஓர் சித்தாந்த தேடல்                                                 



நாணயத்தின் இரு பக்கத்தை போல் , பெண்ணையும் குறித்த புரிதல் இரு வேறாக இருப்பதாக உணர்கிறேன் . என் சிந்தனை சற்று பின்னோக்கி போகிறது . " ஒரு பக்கம் அவ்வையாரை பார்த்து வியக்கிறது , மறுபக்கம் பெண்கள் உடன்கட்டை ஏறுவதையும் பார்க்கிறது ". வேலு நாச்சியாரின் நேரத்தை பார்க்கும் அதே வேளை உணர்வற்ற அடிமைகளாக ஒரு பக்கம் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது ". ஆம்! .  பெண்கள் சமமாக அங்கீகரிங்கப்படவில்லை .
                         கல்வி , விதவை மறுமணம் , சொத்துரிமை  போன்றவை மறுக்கப்பட்டிருந்தது .அவள் உணர்வுகள் இந்த ஆணவ சமூகத்தால் நசுக்கபட்டிருக்கிறது . 
               " பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
                  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் "
 என்ற பாரதியின் கனவு மெய்ப்பட்டுவிட்டதா என்ற சிந்தனை தேடல் இது ?

                   பள்ளி , கல்லூரி ,அலுவலகம் , அரசியல் ,கலை,அறிவியல் ,ஊடகம்  என பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு உள்ளது . நினைத்தது போல் உடை அணிகிறோம் . பெண் சிசு கொலைகள் சற்று குறைந்திருக்கிறது.  பழைய நிலையிலிருந்து நாம் சற்று முன்னேறி இருக்கலாம் . அவளுக்கு இழைக்க பட்ட  கொடுமை என்பது உடல் ரீதியாக என்பதை தாண்டி , உணர்வு ரீதியானது. ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை ஏன் வந்தது ? அவள்  உணர்வுகள்  மதிக்க படாததனால் தான் . அவள் உணர்வுகள் மதிக்க படும் போது தான் நான் உண்மையான விடுதலை அடையமுடியும் . சரி ! அப்படியெனில் , இன்று நம் நிலை என்ன ?
           ஆண் சமூகம் அதிகம் ஆக்ரமித்து உள்ள அரசியல் துறையில் , ஒரு ஆணை கொள்கை ரீதியாக  விமர்சிக்கும் இச்சமூகம் ஒரு பெண்ணை எப்படி எதிர்கொள்கிறது . அவள் வாதத்தில் உள்ள வலிமையை விமர்சிக்காமல் , " அவள் செல்வி யா , திருமதியா " , " அவள் அழகு இயற்கையா,ஒப்பனையா" , " அவள் சிகை ஏன் இப்படி உள்ளது , ஏன் இப்படி உடை அணிகிறாள் " என அவள் சொந்த வாழ்க்கையை  தோண்டும் கோழை சமூகம் .   

நாட்டை ஆளும் ஒரு ஆளுமைக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம் இல்லையா ? என்று சிலர்  கேட்கலாம் . கைகூப்பி வணங்கி ஏற்கிறேன் நண்பர்களே . நிச்சயமாக தேவை தான் . என்னுடைய கேள்வி ,  தனி மனித ஒழுக்கம் பெண்ணிற்கு மட்டும் தானா ? ஆணுக்கு பொருந்தாதா ? 

  ஆண் அரசியல் தலைவர்கள் ," ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடோடு   தான் வாழ்கிறார்களா ? ஏன் இந்த ஒரு சார்பு நிலை ?            

                     "கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,
                       இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் " 
என்ற பாரதியின் கனவு உருப்பெறவில்லையே !!  

  கலைத்துறை - பெண்கள் வியாபார பொருளை மாறிய ஒரு மாயா சந்தை அது. கலை என்ற பெயரில் நாகூசும் வசனங்கள் , கண்  கூசும் காட்சிகள் . இந்த எல்லா வக்ரங்களிலும் பெண்ணின் உடலே மூலதனம் .      அந்த மேல்தட்டு உலகில் மற்ற எல்லா துறைகளை காட்டிலும் அதிக ஊதியம்  ஏன் ? அவள் திறமைக்கா ? நிச்சயம் இல்லை . அவள் அங்கங்கள் அங்காடி பொருளாய் வியாபார படுத்த பட்டதற்கு . இருப்பினும் ஆண் நடிகர்களுக்கு இணையான ஊதியம்   இல்லை . அக்காலத்தில் ஆன் ,பெண் இடையே இருந்த ஊதிய வித்தியாசம் இன்று சற்று உரு மாற்றி கொண்டு உலவுகிறது.

   " போலீஸா இருந்தாலும் நீ பொம்பள , குற்றவாளியா இருந்தாலும் அவன் ஆம்பள "
 என்று பிற்போக்கு தனத்தை விதைக்கும் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது .  

  பெண்கள் போக பொருளாய் நடத்த படுவதற்கு ஆண் சமூகம் மட்டும் தான் காரணமா ? அந்த துறை பெண்களுக்கு சம அளவு பங்கு உள்ளது .இவர்கள்   பிற்போக்கு வசனங்களை எதிர்க்கவில்லை . சம ஊதியம் பெற போராடுவதில்லை . திரை  வாய்ப்புக்காக தன்னை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழவில்லை . தன் சுய முன்னற்றத்திற்க்காக அவற்றை ஏற்று கொண்டு ( சகித்து கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டாம் . நிச்சயம் அந்த வார்ததைகளை நான் கையாளமாட்டேன் ) தனக்கு திரைச்சந்தை கை கொடுக்காது என்ற நிலை வந்த பிறகு , 40  வயதுக்கு மேல் , இவர்களெல்லாம் திடீர் பெண் போராளிகள் ஆகிவிடுகிறார்கள் .

  பெண் குழந்தைகளை பள்ளி கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் போது " தைரியமாக சென்று வா " என்ற சொல்வதில்லை . மாறாக ," பாத்து பத்திரமா போய் வாம்மா " என்ற பேச குரல் ஒலிக்கிறது . மேலோட்டமாக பார்த்தால் இரண்டும் ஒரே  அர்த்தம் தான் . உண்மையில் ஆயிரம்  வித்தியாசம் . முதல் வரியில் தன்நம்மிக்கையும் , இரண்டாவது வரியில் ,பலவீனமான இனம் என்ற அவநம்பிக்கையும் அளிக்கிறோம் .

படித்து முடித்தவுடன் திருமணம் அல்லது அரை மணி நேரத்தில் பொய் வரும் தூரத்தில் , அவள் திறமைக்கு சற்றும் ஒத்து வராத ஏதோ ஓர் வேலை . ஒரு வழியாக தடைகளை தகர்த்தெறிந்து , முட்டி மோதி உயர் பதவியை அடையும் ஒரு பெண் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வகித்தால் அதற்கு பெயர் அதிகார திமிர் .  

                       வரதட்சிணை முழுமையாக ஒழியவில்லை.   லட்சங்களில் ஊதியம் பெறும் மாப்பிள்ளைகள் கூட , தன் வீட்டு செலவுகளை மாமனார் , மைத்துனர்கள்  செய்ய வேண்டும் என்ற மனோபாவம் கொண்டு  உள்ளனர்  .அந்த நேரத்தில் இரு தலை கொல்லியாக இருக்கும் அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை. இது போன்ற மாப்பிள்ளைகளை கைகூப்பி வணங்கி பெண் கொடுக்க முன் வர  நம் சமூகத்தில் பஞ்சம் இல்லை .
                             " தன் மகள் சுய கெளரவதோடு வாழ்வதை விட , 
                               சுக போகமாக வாழ்வதை விரும்பும்  முட்டாள் கூட்டம் ".
மறுமணம் செய்ய நினைக்கும் ஆண் , தன்னை விட இளமையான பெண்ணை அவள் வறுமையை காட்டி திருமணம் செய்து கொள்கிறான். ஆனால், ஒரு பெண் மறுமணம் செய்ய நினைத்தால் , அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது    . தன் வயதுக்கு சற்றும் ஒத்து வராத வரனாக இருத்தலும் ஏற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஆண் மகன் இவளுக்கு  கொடுக்கிறானாம் . இந்த பிற்போக்கு தன  நீதியை பிரகடன படுத்தி அதை " மறுமலர்ச்சி" என்று சொல்கிறது இந்த பேதை சமூகம் .  அவள் வாழ்க்கையை அவளுக்கு கொடுக்க நீ யாரடா மூடனே ?

          இப்பொழுது நான் உரக்க சொல்வேன் பெண்ணியம் குறித்த புரிதல் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இல்லை என்று . அது சரி ! பெண்ணியம் பற்றிய புரிதல் பெண்ணிற்கு உள்ளதா ?

                             " காலை சமையல் உனது , மாலை எனது ,

                                 நீ மது உட்கொண்டால் நானும் உட்கொள்வேன் 

                                 நீ நட்சித்திர விடுதியில் நடு   இரவு  வரை ஆட்டம் போட்டால் நானும் போடுவேன்"

என்று அவர்கள் தவறுகளில் பங்கெடுக்கும் ஆபத்தான மனோபாவம் ஒரு பக்கம் வளர்ந்து கேடே உள்ளது .
                 குட்ட குட்ட குனியும் போது நீ அடிமை வம்சமாகிவிட்டாய்.அறிவார்ந்த சிந்தனையோடு பொங்கி எழாமல் , முட்டாள்தனமான எதிர்மறை சிந்தனையோடு நீ எழ முற்பட்டால் உன்னை அடிமை வம்சமென சாசனப்படுத்திவிடுவார் .
                                  சமயலறையில் சம உரிமை தேடாமல் , ஆண்களின் தவறுகளை அச்செடுக்கமால் , பெண்ணிற்கு உரிய தாய்மையை விட்டு கொடுக்காமல் , 

                             " அன்பு கொடுக்கும் அம்மா , 
                                அறிவு கொடுக்கும் அப்பா "

 என்பதை உடைத்தெறிந்து ,
                                " அன்பும் , அறிவும் கொடுக்கும் அம்மா ,அப்பா " 
 என்பதை நோக்கி செல்வதே  சம உரிமை .

               " சம உரிமை கேட்ட குல மகளே ,
                  விழித்தெழு !
                  உன் உணர்வு உரு பெறும் வரை 
                  நீ சிறைப்பறவை !
                  பெண்ணிற்கு அளிக்கும் உரிமை 
                  கலாச்சார சீரழிவின் தொடக்கம் 
                   என்ற சொல்லை உடைத்தெறி !"

                  
                        ஆணாதிக்க சமூகமே ,
                        எச்சரிக்கை !
                         அறிவார்த்த பாரதி கண்ட 
                         புதுமை பெண்ணும்  ஒரு பக்கம் 
                         வேகமாக வளர்கிறது !!

                  

 



    
                                  

 


   



பதிவு : Elakkiya Sundar
நாள் : 17-Jan-18, 4:38 pm

மேலே