தமிழ் மொழி பாட்டு செம்மொழி பாடல் வரிகள் பிறப்பொக்கும்...
தமிழ் மொழி பாட்டு
செம்மொழி பாடல் வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாராயேனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பைப் பகுத்து கூறும்
ஒல்க புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்
ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும் சிந்தமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
கம்பர் நாட்டால்வாரும் கவி அரசியவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகல்கின்ற
எம்மதமும் ஏற்று புகல்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
அகம் என்றும் புறம் என்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம் மொழி செம்மொழி.. அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே !!!!