தமிழ் எண்ணம்
(Eluthu Ennam)
தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?
தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குமாறு stackexchange இணையத்திற்கு எடுத்துரைத்துள்ளேன். 50 பேர்களுக்கும் மேல் பின்தொடர்ந்தும், 40க்கும் மேற்பட்ட கேள்விக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றால் மட்டுமே தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குவார்கள். இந்த இணையத்தின் மூலம், நாம் அணைத்து தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்ட முடியும். நாம், நமது நண்பர்கள் தமிழுக்காக செய்துவரும் அனைத்தையும் உலகின் பார்வைக்கு கொண்டுவரமுடியும். கீழ் உள்ள இணைப்பில் சென்று உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழன்னை
எங்கள் எண்ணமெல்லாம்
எங்கும்நிறைந்தவள்
பிறர் அழிக்க அழிக்க நினைத்த போதெல்லாம் ஆர்ப்பரித்து
எழுந்துநிற்பவள்
பிறர்மொழி துணை
இன்றி வாழ்பவள்
உலக மொழிகளுக்கு
தாயானவள் எங்கள் தாய்
பாதம் போற்றி!!!
மகள் வெண்பாவுக்கு!
ஒப்பனை செய்யாமல் தேவதையின் முகம் பேருந்து நிலையத்தில்..............
தமிழா தமிழை மறக்கலாமா
மறக்கலாமா நீ
தமிழா
உனக்கு இங்கிலீசு நன்றாகக்
கதைக்கத் தெரிந்து
விட்டால் நீ என்ன
வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..???
அல்லது திராவிடர் தோற்றம் தான்
உன்னை விட்டுப் போய்விடுமா????
வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால்
தம் மொழியில் ஹாய் சொல்லி
சிரித்து விட்டு செல்கின்றனர்
உனக்கு என்ன செருக்கா...???
தமிழனைக் கண்டு விட்டால்
எதிரியைக் கண்டது போல்
முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே.....
தமிழனுடன் தமிழில் கதைக்க
உனக்கு என்ன கேவலமா..????
நன்றி கெட்டவர்களே
உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா????
வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது
கதைக்காமல் போகின்றாய் நீயும்
தமிழரைத் தாண்டிச் செல்லும் போது
ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டு
ஒரு வித இழு பட்ட நடையுடன் போகின்றாயே....
உனக்குத்தான் இங்கிலீசு தெரியும்
என்று பெருமை சேர்க்கின்றாயோ ..
உனக்கு நீயே தற்ப்புகழ் சேர்க்கின்றாயோ...
அட அறிவு கெட்டவர்களே
தற்புகழ் தேடுவது நற்ப்புகழ் அல்ல
என்று சொல்லக் கேட்டு நீயும் அறிந்ததுண்டா..???
இதற்கு விளக்கம் நீயும் தெரிந்து கொண்டதுண்டா...?????
இங்கு பிறந்த தமிழ்க் குழந்தைகள் கூட
இனிமையுடன் நம் மொழியைப் பேசும் போது
நீ இங்கு வந்த கொஞ்சக் காலத்திலே
தமிழ் கதைக்கத் தெரியாமல்
விழிக்கின்றாயே நீயும் செருக்குடன் திரிகின்றாயே...
உனத் தாங்கி வளர்த்துவிட்ட
உன் தாய் மொழியை நீதான் மறக்கலாமா..
அட நன்றி கெட்டு நீயும் உந்தன் நாட்டு
தாய்த் தமிழ் மொழியை மறக்கலாமா...????