முத்தரசு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்தரசு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 31-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 36 |
உங்களின் ஊக்கத்தால் உயிர்பெறும் எனது கவிதைகளுக்கு உணர்வுகளை உரமிட்டு வளர்க்கிறேன்...
எனது கவிதைகள் உங்களைத் தின்று ஏப்பமிடும் எழுத்துப் பூதங்கள்...
தலைப்புகளால் பொறிசெய்து உலகின் உயிர்மேயச் செய்யும் அமானுஷ்யக் கவிஞன் நான்...
nகவிதை பூதங்கள் சாக்கிரதை...
~*~
விடிய விடிய
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
எங்கிருந்து
வந்தார்களெனத்
தெரியவில்லை..
இவர்களுக்கு
எப்படித் தெரிகிறது
எனது மனதின் மொழி..
இவர்களுக்கு
எப்படி கேட்கிறது
எனது மிகக் கச்சிதமான
ஆனந்தப் புன்னகைக்குள்
சொட்டும் துளிநீரின்
மாய அழுகையின் குரல்..
இவர்களால் எப்படி
உணரமுடிகிறது
மிகச் சத்தமான
எனது மௌனத்தின்
அப்பட்டமான அர்த்தம்..
இவர்களால் எப்படி
பேச முடிகிறது..
அத்தனை ஆவேச
அடிதடிச்சண்டைகளுக்குப்
பின்னும் அரட்டையத்து
அன்புபாராட்ட..
இவர்களால் எப்படி
பொறாமையின்றி
கொண்டாட முடிகிறது
அவர்களுடனான
போட்டியில் எனது
வெற்றியை..
இவர்களுக்கு
யார் சொல்லித்தந்தது
எத்தனை இடர்களிலும்
விட்டுவிடக்கூடாதென..
இவர்களுட்கு யார்
கற்றுத்தந்தது..
எனது சகோதர
நீ எழுதப் படாத
புத்தகம்...
எனக்குமட்டும்
புரிந்த புதிர்...
ஏடேறாக்
கவிதை...
எட்டணாக்கு
மிட்டாய் தின்ற
கடைசி தலைமுறை...
எக்கச்சக்கமாய்
புழுகும்
சுட்டித் தங்கை...
ஏசி ரூமுக்குள்
குடியேறப் போகும்
குட்டிப் பூதம்...
குவளை நீர்
கேட்டாள்
குடத்தை
தூக்கிவரும்
எனக்கு இளய தாய்...
இல்லாத ஒன்றை
இருப்பதுபோல
காட்டும்
கோமாளிக் குழந்தை...
எதற்கெடுத்தாலும்
ஏக்கர் கணக்கில்
பொலம்பும்
எட்டு வயது தாண்டிய
ஏஞ்சல்...
பள்ளிக்குச்
செல்லாமலேயே
பாசாகும் பாசக்காரி...
எப்போது பார்த்தாலும்
கவிதை கேட்கும்
ஐந்தடித் தொல்லை...
அழகாக இருந்தாலும்
ஆப்பிள் போல
இல்லையே என
பொறாமைப்படும்
பொட்டுக்கடலை...
இந்தக் கவிதையைப
பின் தலையின்
அடி புதைந்த
ஏதோ ஒரு நரம்பின்
நுனிப் பிடித்திழுத்து
இதய வால்வுகளினிடையே
துளையிட்டு
இறுக்கமாய் தைத்து
இங்கிதம் மறந்து
எனை
சங்கீதம் பாடவைக்கும்
உனது விழிகளில்
வழிகிறது
வசிய
இரசவாதம்...
~☆~