புழுகுனித் தங்கை...
நீ எழுதப் படாத
புத்தகம்...
எனக்குமட்டும்
புரிந்த புதிர்...
ஏடேறாக்
கவிதை...
எட்டணாக்கு
மிட்டாய் தின்ற
கடைசி தலைமுறை...
எக்கச்சக்கமாய்
புழுகும்
சுட்டித் தங்கை...
ஏசி ரூமுக்குள்
குடியேறப் போகும்
குட்டிப் பூதம்...
குவளை நீர்
கேட்டாள்
குடத்தை
தூக்கிவரும்
எனக்கு இளய தாய்...
இல்லாத ஒன்றை
இருப்பதுபோல
காட்டும்
கோமாளிக் குழந்தை...
எதற்கெடுத்தாலும்
ஏக்கர் கணக்கில்
பொலம்பும்
எட்டு வயது தாண்டிய
ஏஞ்சல்...
பள்ளிக்குச்
செல்லாமலேயே
பாசாகும் பாசக்காரி...
எப்போது பார்த்தாலும்
கவிதை கேட்கும்
ஐந்தடித் தொல்லை...
அழகாக இருந்தாலும்
ஆப்பிள் போல
இல்லையே என
பொறாமைப்படும்
பொட்டுக்கடலை...
இந்தக் கவிதையைப்
படித்தே பூரித்து
பூரிபோல ஆகும்
வடநாட்டு பத்துரா...
டரீட்டு கேட்டே
நோகடிக்கும்
என் உயிர் தோழி...
என் உயிர் போனாலும்
நான் வாழும்
ஒரே மாளிகை....
என் அன்புத் தங்கை...
~☆~
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 🙏 💐 🎉