வசிய இரசவாதம்...

பின் தலையின்
அடி புதைந்த
ஏதோ ஒரு நரம்பின்
நுனிப் பிடித்திழுத்து
இதய வால்வுகளினிடையே
துளையிட்டு
இறுக்கமாய் தைத்து
இங்கிதம் மறந்து
எனை
சங்கீதம் பாடவைக்கும்
உனது விழிகளில்
வழிகிறது
வசிய
இரசவாதம்...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (14-Jul-18, 9:54 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 45
மேலே