நேசம்

வானின் நீலத்திலே
என்னவளே உன்
விழியின் வண்ணம்
தெரியுதடி என்னவளே..

பார்க்கும் மலர்களிலே
என் அன்பே
உன் புன்னகை தெரியுதடி
என் அன்பே...

பரவும் ஒலிகளிலே
என்னவளே
உன் அழகுப்பெயர்
ஒலிக்குதடி என்னவளே...

கானும் கனவுகளில்
என் உயிரே
உன் ஆசைமுகம் தோன்றுதே
என் உயிரே...

ஆயிரம் உறவுகளிலே
என் ஜீவனே
உன் நேசம் வீசும்
இதயமொன்றே போதுமென்பேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-Jul-18, 9:09 am)
Tanglish : nesam
பார்வை : 306

மேலே