உன் கண்கள்

உந்தன் கண்களுக்குள் மட்டும் இத்தனை
i அழகை ஏன் பூட்டிவைத்திருக்கிறான் இறைவன்,
உந்தன் இமைகள் முடித்த திறக்க முடித்த திறக்க
மாயப்பெட்டிபோல் கண்களில் நான்
காண்கின்றேனே பெண்ணே ஆயிரம் ஆயிரம்
காட்சிகள் -இதைக் கண்டு ரசிக்க போதலையே
இறைவா நீ எனக்கு தந்த என் இரு விழிகள்
இன்னும் அவன் ஆயிரம் கண்கள் எனக்கு தந்தாலும்
உன் கண்கள் பேசும் காவியங்களுக்கு என்னால்
காட்சிப்படுத்த இயலாது அதற்கேற்ற
கவிதை வரிகளையும் மனதில் கொண்டுவர இயலாது
உன் கண்களுக்கு என்னிடம் கவிதை வரிகள் இல்லையடி
கவிதையே காவியமாய் உன் கண்களாய் இருக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-18, 12:11 pm)
Tanglish : un kangal
பார்வை : 99

புதிய படைப்புகள்

மேலே