சூரியன் அனைந்துவிட்டால்

சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது

பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்

வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்

காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்

இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்

பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்

கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
கணினி சொல்லித்தரும்

உணவு இடைவேளை
உறக்கம் தனிவேலை
உடனுரங்கும் பழக்கம் எல்லாம்
அனுபவம் என்றாகும்

முன்னோர் கதைகள் போல்
முன்னோர் பகலில்
நடந்தெதென்று
வரலாறு உருவாகும்

மாற்றம் தேடி மனிதன்
அலையும் நேரம் வரும்
மரணம் வரை இரவுதான்
என்று நிலை தொடர்ந்து விடும்

காலம் மாறியதால்
காதலும் கணக்கெடுப்பில்
நாட்கள் என்பதெல்லாம்
பாதியாய் குறைந்திருக்கும்
நடு இரவு நடு பகல்
என பழக்கம் வந்திருக்கும்

அடுத்த உலகம் கிடைக்கும்வரை
பகல் என்பதே நமக்கில்லை

இது நடந்துபோனல்
எதுவும் நிலையில்லை

எழுதியவர் : Rudhran (30-Sep-22, 10:37 am)
பார்வை : 130

மேலே