ஒரு நிகழ்வு-பார்வைகள் பல

ஒரு நிகழ்வு-பார்வைகள் பல

விடிந்தும்
சோம்பி கிடக்கின்றன
மலர்கள்

விரியலாமா வேண்டாமா?
என்று

புற்கள் கூட
நுனியில் இருக்கும்
பனித்துளியை
உதறி விட மனமின்றி
தலை கவிழ்ந்து
கிடக்கிறது

இனி !
சூரியன் வந்துதான்
இவைகளை
எழுப்பி விட
வேண்டும்


உதித்த சூரியன்
கதிர் பட்டு

புல் வெளி
எங்கும் வைர
துணுக்குகளை
வாரி இறைத்தது
போல்

நுனியில் தொங்கும்
பனி துளிகள்
கண்ணுக்கு விருந்தாய்

சோம்பி கிடக்கும்
மலர்கள் கூட
இவன் முகம்
கண்டு தன்
இதழ் விரித்து
சோம்பலை களைந்து
புன்னகை காட்டுகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Sep-22, 4:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 87

மேலே