இயற்கை மாறிவிட்டால்

வெய்யோன் மறைய மறந்தி ருந்தால்
வையம் இருளைத் தேடி அலையும்
வானில் நீலவானில் நிலவைக் காணாது
உலகம் நிலை தடுமாறி பித்தாய்த்
திரியும் பருவங்கள் தவறி விட்டால்
எதைத் தேடி அலையும் ஒன்றும்
புரியாது தன்னையே அறியாமல் இறைவா
நீயே கதி எம்மைக் காத்திடுவாய்
என்று தானே அவன் பாதம் தேடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (4-Oct-22, 8:49 pm)
பார்வை : 142

மேலே