நண்பேன்டா....
எங்கிருந்து
வந்தார்களெனத்
தெரியவில்லை..
இவர்களுக்கு
எப்படித் தெரிகிறது
எனது மனதின் மொழி..
இவர்களுக்கு
எப்படி கேட்கிறது
எனது மிகக் கச்சிதமான
ஆனந்தப் புன்னகைக்குள்
சொட்டும் துளிநீரின்
மாய அழுகையின் குரல்..
இவர்களால் எப்படி
உணரமுடிகிறது
மிகச் சத்தமான
எனது மௌனத்தின்
அப்பட்டமான அர்த்தம்..
இவர்களால் எப்படி
பேச முடிகிறது..
அத்தனை ஆவேச
அடிதடிச்சண்டைகளுக்குப்
பின்னும் அரட்டையத்து
அன்புபாராட்ட..
இவர்களால் எப்படி
பொறாமையின்றி
கொண்டாட முடிகிறது
அவர்களுடனான
போட்டியில் எனது
வெற்றியை..
இவர்களுக்கு
யார் சொல்லித்தந்தது
எத்தனை இடர்களிலும்
விட்டுவிடக்கூடாதென..
இவர்களுட்கு யார்
கற்றுத்தந்தது..
எனது சகோதரியையும்
எனது காதலியையும்...
முரணின்றி தனது
சகோதரியென
நினைப்பதற்கு....
இவர்களால் மட்டும்
எப்படி சொல்ல முடிகிறது.
எவ்வளவு பிரச்சினைகள்
வந்தாலும்..
மச்சி விட்ரா நாங்க இருக்கோம்
ஒருகை பார்த்துவிடலாம் என்று?
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்
எனக்கான வாழ்கையை
வாழ்ந்துபார் என வற்புறுத்த..
ஒருவேலை இவர்கள்தான் அந்த
வானத்து மனிதர்களா?
இல்லை இல்லை
இவர்கள் அவர்களையும்
படைத்தவர்களாகத்தான்
இருக்க வேண்டும்...
நண்பேண்டா...
நட்புடன்
ம.முத்தரசு
~☆~
அனைவருக்கும் இனிய உலக நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
💐🙏😊🎉