முடிவில்லாத பயணம்
விடைதெரியா கேள்விகள்
இடைவிடாத தேடுதல்
கடந்துபோன உறவுகள்
கலைந்துபோன கனவுகள்
மனம்கொள்ளா மாற்றங்கள்
இனம்புரியா குழப்பங்கள்
புறக்கணிக்கும் பலர்
அரவணைக்கும் சிலர்
தொலைத்த தருணங்கள்
மனம் துளைத்த ரணங்கள்
தனிமையில் கிறுக்கும் கவிதைகள்
இறுக்கத்தை நொறுக்கும் மழலைகள்
மகிழ்ச்சியின் முகவரி தேடி
முடிவிலியாய் தொடர்கிறது
என் நிகழ்கால பயணம்..
எதிர்காலம் வசமாகும்
எதிர்பார்ப்புகள் நிஜமாகும்
நம்பிக்கையுடன் நான்
நடுத்தரவர்க்கத்து ஆண்...

