இடி மழை

இடி மழை

மின்னல் தன்னிடம்
இருக்கும் சாட்டையால்
வானத்தின் மீது
வீசி அடித்து
கொண்டிருக்கிறது
சில நேரங்களில்
பூமியின் மீது
பட்டும் செல்கிறது

வலி தாளாமல்
பெரும் கூக்குரலாய்
சப்தமிட்டு
அழுது கொண்டிருக்கிறது
வானம்
பெரு மழையாய்

வேடிக்கை பார்த்த
மேகங்கள் எல்லாம்
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டுள்ளது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Dec-25, 9:30 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : idi mazhai
பார்வை : 2

மேலே