மல்லிகையே
மாலையில் அரும்பாகி மலராவாய் பொன் அந்தியில்..
உன் இருப்பிடத்தை உணர்த்தும் காற்று தன் வதந்தியில்!
வெள்ளை நிறம் கொண்ட சின்ன மல்லிகையே..
சிறிதானாலும் உண்டு உன்னிடம் பல வகையே!
குண்டு குண்டாய் குண்டு மல்லி..
பெருமை சேர்க்கும் மதுரையில் தன் பேர் சொல்லி..
உண்டு நானும் என ஊசி மல்லி கூறும்..
கண்டு செல்வோமே இம்மலரை தினந்தோறும்!
அடுக்கு மல்லி பெரியதாய் மலரும்..
இலையுடன் சூடுவர் பாவையர் பலரும்!
ஜாதி மல்லியிடம் இல்லை ஜாதி..
மணத்தால் சிறந்து விளக்கும் சேதி!
இரண்டடுக்கு இதழில் இருக்கும் இருவாச்சி..
ஈடில்லை கானும் மனதில் பெரு மகிழ்ச்சி!
மலருமே மரத்தில் பவளகாம்புடன் பவளமல்லி...
மடியுமே விடியலில் இறைவன் நாமம் சொல்லி!
நீளக்காம்புடன் நித்தியமல்லி பிறக்கும்..
மகரந்த மணம் தெருவையே நிறைக்கும்!
மலரே! தவறி உன் ஆயுள் குறை ஆனதே..
தவறாமல் உன்னிடம் என் மனம் பறி போனதே!!

