விடிய விடிய கொண்டாடித்தீர்த்துவிட்டு விடிந்ததும் அயர்ந்து உறங்கச்செல்கின்றன விண்மீன்கள்......
விடிய விடிய
கொண்டாடித்தீர்த்துவிட்டு
விடிந்ததும் அயர்ந்து உறங்கச்செல்கின்றன
விண்மீன்கள்...
களைப்பு நீங்கி
மீண்டும் தொடங்கும்
கொண்டாட்டப் பெருவிழா
ஒவ்வொரு இரவிலும்...
நேற்று மண்ணிருந்தவன்
நாளை விண்சென்றும் களிக்ககூடும்...
விண்மீண்கள் ஒருபோதும்...
மண்ணோக்கி வருவதில்லை...
அவை உமிழும் ஒளி பட்டு
நாம் ஆறுதல் அடைகிறோம்...
சிலப் பொழுது ஆற்றாமை கொள்கிறோம்...
விண்மீன்களின் மரணம் என்பது
பிரபஞ்சத்தின்
மகாப் பெருவிழாவாகவே நிகழும்...
மனிதனின் உயிர் மயிரளக்கும்முன்
நிகழுந்து முடிந்துவிடும்...
விண்மீன்களின் மரணம்
முடிவேதும் இல்லாது நித்திய
ஒளியாய் நில்லாது பயணிக்கும்...
நீ மடிந்து மறுபிறப்பெடுக்கும் காலச் சக்கரத்தின் சுழற்சியில்
மீண்டும் மீண்டும் நீ காணும்
ஒரு மகாபேரொளி அந்நட்சத்திரத்தின்
வாழ்நாளின் ஒரு இமைப் பொழுதுக்கும்
குறைவென்பதை அறி...
வாழ்வையும் சாவையும்
எப்படிக் கொண்டாட வேண்டும் என
கொண்டாடிக் கற்றுக்கொள்....
ஒவ்வொரு இரவிலும்
ஒரு விண்மீன் உன்னை
ஆசீர்வதிக்கட்டும்...
உன் மிச்ச வாழ்வையேனும்
மெச்ச வாழ்...
அன்பு...
முத்தரசு மகாலிங்கம்
~*~