எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபத்திருநாள் தீபத் திருநாளில் இனிய தீபத்தை ஏற்றிடுவோம் தீயவற்றை...

தீபத்திருநாள் 


தீபத் திருநாளில் இனிய 
தீபத்தை  ஏற்றிடுவோம்  
தீயவற்றை  எல்லாம் 
பெரும் தீயிட்டு  கொளுத்திடுவோம் 

சாபத்தை  பெற்றவர்கள் போல் 
சலித்துப் போன வாழ்க்கையை 
காண வேண்டி  இருக்கிறது அதை 
பலத்த  கரம்  கொண்டு  அழித்திடுவோம் 

ஏழைக்கு கஞ்சிதான்  என்றநிலை  மாறி 
எல்லோர்க்கும் இங்கு  சமநிலை ஓங்க 
வல்லாரின் ஓங்கு கைகளை  உடைத்து 
வல்லானின்  திருவருளை  வேண்டி நிற்போம் 

சொல்லாலும்  செயலாலும்  உண்மை  கொண்டு 
எல்லா மக்களும் நம்மவர்  என்றெண்ணி 
பேதமை  தீயை  கொளுத்திடுவோம் 
பேராற்றுமைக்கு  வழி  சமைத்திடுவோம் 

உதவியின்றி போராடும் முதியவர்களையும் 
உணவின்றி தவிக்கும்  நமது  உறவுகளையும் 
யாரோ  என்றெண்ணாது நம்  சொந்தங்கள் 
என்று  அவர்கள் துக்கத்திலும் பங்கெடுப்போம் 

எத்தனை  குழந்தைகள்  வீதியிலே  ஏங்கி 
தவிக்கின்றார் சாலையிலேயே  விழிகளில் 
ஏக்கம்  கொண்ட  அபலைகளின் இனிய 
வாழ்க்கைக்கு  ஒரு தீபம்  ஏற்றிடுவோம் 

இன்றய அநீதி நிலை  மாறிடணும் இங்கே 
பெண்களும் பயமின்றி வாழ்ந்திடணும் 
எல்லோருமே ஓரினம்  ஒருறவு என்றே 
இனிய தீபத்திருநாளை  இனிதே  வரவேற்போம்

பதிவு : Ranjeni K
நாள் : 22-Oct-22, 7:11 pm

மேலே