எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வந்தது வந்தது ஒளி, நம் வாழ்க்கை மேலோங்கும். தீர்ந்தது...


வந்தது வந்தது ஒளி, 
நம் வாழ்க்கை மேலோங்கும். 
தீர்ந்தது தீர்ந்தது வலி, 
மனதில் சந்தோஷம் பொங்கும். 

பட்டாசு வெடிக்க வெடிக்க, 
மத்தாப்பு சிதற சிதற, 
பலகார விருந்து படைத்து, 
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைய, 
நாமும் மழலையாக வந்தது வந்தது ஒரு ஒளி. 

வயதை கொஞ்சம் மறந்து, 
வரிசையில் விளக்கு ஏற்றி, 
கோபம் சலனம் துறந்து, 
இருளின் அறியாமை விளக்கி, 
கோவில் சென்று வந்து, 
அருளும் அன்பும் ஒன்றாய் கருதி, 
நட்பை பகிர்ந்து வளர்க்க, 
இனிமையாய் பொழுதை கழிக்க, 
வந்தது வந்தது தீப ஒளி... 

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள். 

நாள் : 25-Oct-22, 3:51 pm

மேலே