Ranjeni K - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Ranjeni K
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-May-2020
பார்த்தவர்கள்:  203
புள்ளி:  23

என் படைப்புகள்
Ranjeni K செய்திகள்
Ranjeni K - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2020 12:54 pm

நான் நடந்த பாதையிலே
நாளாந்தம் அவனும் நடக்கின்றான்
எங்கேயோ பார்ப்பது போல் பார்க்கின்றேன்
எனக்குள் நானே சிலிர்க்கின்றேன் மனதால்

தோளில் சுமந்த பையுடன் மிகவும்
நேர்த்தியான உடையணிந்து
மிக கம்பீரமாக அவன் இருப்பான்
கறுப்பான அவனோ மிக அழகு

துடுக்காக எனை நோக்கும் கண்கள்
எனக்கு சொல்ல வருவதென்னவோ
ஏதும் சொல்லமாட்டானா என ஏங்குகின்றேன்
என்றுமே நாங்கள் பேசவில்லை

மாதங்கள் பல மறைந்தன என்
பயணசீட்டை பெறுவதற்காக
பரபரப்போடு நான் நின்றேன்
என் பின்னாலே அவன் நின்றான்

சீட்டை பெற்று நான் அமர்ந்தேன்
என் முன்னாள் அவன் அமர்ந்தான்
லேசாக என்னை பார்த்து சிரித்தான்
சிரிப்பா அது பிரகாசமான ஜொலிப்பு

மேலும்

Ranjeni K - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2020 11:47 pm

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பல பல. வண்ணப் பட்டாம்பூச்சி
பட படவென சிறகடித்து
பறப்பது என்ன நீ பட்டாம்பூச்சி

குளு குளு மலர்களில் தாவுகின்றாய்
குதுகுகாலமாகவே மாறுகின்றாய்
குந்தி குந்தி மலர்களில் நீ
குதிப்பது என்ன பட்டாம்பூச்சி

சின்னச் சின்னச் சிறகுகளில்
சொல்லவொண்ணாத அதிசயங்கள்
செதுக்கி வைத்தவர் யாரோ நீ
சிந்தித்து சொல் அவர் பேரோ

உன்னைத் தொட்டுப் பார்க்கவா
உன் உடனே தோழி ஆகவா
உன்னை என் கைகளுக்குள்
உரிமையோடு சிறை வைக்கவா

மழலை பருவத்தில் நீ எனக்கு
மகா அதிசயம் பட்டாம்பூச்சி
மனிதகுலம் யாவுமே உன்னை
மறந்து போகுமா பட்டாம்பூச்சி

பூக்களை தேடி முத்தமிட்டு
பூரித்து போகும் உன் காதல

மேலும்

அருமை.. 19-Jul-2020 5:26 pm
Ranjeni K - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2020 3:37 pm

ரொம்ப நாளைக்குப் பிறகு, மாலா இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். தன் அன்புக்குப் பாத்திரமான பாயம்மாவைப் பார்ப்பதற்காக, ஆனால் பாயம்மாவின் வீடோ பூட்டி இருந்தது. என்னடா!.....இவ்வளவு தூரம் வந்தும், பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு சுற்றும், முற்றும் பார்த்தாள். அப்போது, பக்கத்து வீட்டு லலிதா அந்தப்பக்கம் வந்தாள். அவளிடம் பாயம்மாவைப் பற்றி விசாரித்தபோது தான், விவரம் தெரிந்தது. துக்கம் தாங்க முடியவில்லை...... 5 வருடங்களுக்கு முன்னாடியே, பாயம்மா இறந்து விட்டதாக லலிதா சொன்னாள். முதன் முதல் பாயம்மாவை பார்த்த அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். மாலாவும், அவள் குடும்பமும் அந்த பகுதிக்கு குடி வந்து, ஒரு

மேலும்

Ranjeni K - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2020 3:36 pm

என்னை நம்பி அவளை ஒப்படைத்து விட்டு
எங்கோ வெளியே சென்று விட்டாள்
அவள் அன்னை நானும் அவளுமோ
தனிமையில்

பக்கத்தில் பதுமை போல் அமர்ந்து கொண்டாள்
அப்படியே அள்ளிக்கொண்டேன்
மறுக்கவில்லை ஒட்டிக்கொண்டாள்
அந்த ஒரு நிமிடம் ஆஹா

அவள் சுவாசம் என் கழுத்தில் சுட
என்ன என்று கன்னத்தை தட்டிக்
கேட்டேன் கள்ளமின்றி சிரித்தாள்
மறுபடியும் அணைத்துக் கொண்டேன்

சிரிக்கிறாள் கோடி ரோஜாக்களை
கொட்டியது போல் ஒரு மலர்ச்சி
சும்மா சொல்லக் கூடாது அழகி
அவளோ எனக்கு பேரழகி

கலைந்த தலை முடியை என்
கைகளால் கோதி விட்டேன் என்
கன்னத்தை தன் பட்டு கைகளால்
தொட்டு தடவி விட்டாள்

ஒரு முத்தம் தா என்றேன்
மறுப்பேதும் இன

மேலும்

Ranjeni K - Ranjeni K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 1:37 am

சிறு ரோஜாவொன்று

ரோஸ் வண்ணத் துணிக்குள்ளே !
துயில் கொண்டது சிறு ரோஜாவொன்று!
மெத்தென்ற போர்வைக்குள்ளே!

மிக அழகான புது உறக்கம்
சந்தோசத்தின் புது வரவல்லவா இது!!

தொட்டுப்பார்க்க ஆசை பட்டேன்
ஓசை பட்டால் எழுந்து விடுவாயோ
என்று எனக்குள்ளே ஏக்கப்பட்டேன்
பட்டு விரல்களை தொட்டுப் பார்க்க
ஆசைதான் சொல்ல முடியவில்லையே
ஆனாலும் எனக்குள் பரவசம் தான்


ரோஜாப்பட்டு தங்கப்பட்டு செல்லப்பட்டு
தங்கமாம்பழம் செல்லக்கண்டு வட்டக்கண்ணி
போட்டுக்கண்ணி ராசாத்தி
நீ எனக்கு ரோஜாப்பூ செவ்வந்திப்பூ
சிரிப்பழகி போம்மா எனக்கு
மூச்சு வாங்குகிறது இன்னமும்
இருக்கு என் இதயத்தில் எழுத்தால்
வடிக்க முடியவில்லை எ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே