சிறு ரோஜாவொன்று

சிறு ரோஜாவொன்று

ரோஸ் வண்ணத் துணிக்குள்ளே !
துயில் கொண்டது சிறு ரோஜாவொன்று!
மெத்தென்ற போர்வைக்குள்ளே!

மிக அழகான புது உறக்கம்
சந்தோசத்தின் புது வரவல்லவா இது!!

தொட்டுப்பார்க்க ஆசை பட்டேன்
ஓசை பட்டால் எழுந்து விடுவாயோ
என்று எனக்குள்ளே ஏக்கப்பட்டேன்
பட்டு விரல்களை தொட்டுப் பார்க்க
ஆசைதான் சொல்ல முடியவில்லையே
ஆனாலும் எனக்குள் பரவசம் தான்


ரோஜாப்பட்டு தங்கப்பட்டு செல்லப்பட்டு
தங்கமாம்பழம் செல்லக்கண்டு வட்டக்கண்ணி
போட்டுக்கண்ணி ராசாத்தி
நீ எனக்கு ரோஜாப்பூ செவ்வந்திப்பூ
சிரிப்பழகி போம்மா எனக்கு
மூச்சு வாங்குகிறது இன்னமும்
இருக்கு என் இதயத்தில் எழுத்தால்
வடிக்க முடியவில்லை என்னால்

சொல்லி கொடுத்ததை அள்ளிக்கொள்ளும்
சிறப்பு உன்னை தினம் பார்க்காமல்
போனால் ஏனோ எனக்குள்ளே தவிப்பு
புல்லரித்து போகிறேனடி உன்
முளைத்தும் முளைக்காத மழலை மொழியில்
ஒரு கவிதையே பல கவிதை சொல்வது போல்
இருக்குதடி எனக்கு

நாங்கள் யார் நீ யார் தெரியவில்லை எனக்கு
அத்தனையும் தந்தது இந்த பிணைப்பு
எது உறவுக்கும் அப்பாற்பட்ட சொந்தமடி
தூரங்கள் பல போனாலும் உன்னை தொடர்ந்து
இருப்போம் எங்களின் எண்ணங்களால் ....

எழுதியவர் : Ranjeni K (17-May-20, 1:37 am)
பார்வை : 1464

மேலே