எமனை வெல்ல

எமனை வெல்ல

எண்சீர் விருத்தம்

காய். காய். மா. மா

ஓமென்ற மலக்கட்டைக் கழிக்க வைத்தால்
உடலிலுள்ள வாதமெல்லாம் ஓடிப் போகும்
காமென்ற சிறுநீரைத் தெளிய வைத்தால்
ஜடத்திலுள்ள வேகமெல்லாம் தணிந்து போச்சு
உமிழ்நீரை முறியவைத்தால் கூட்டி வைக்கும்
உள்ளபகை யெல்லாமும் குறைந்து போச்சு
இம்மூன்றின் களங்கமெல்லாம் அகற்றி விட்டால்
கொல்லவந்தக் காலனையும் வெல்ல லாமே


ஒருவன் தினந்தோரும் இருவேளை மலத்தை ஒழுங்காகக் கழிப்பானாயின் அவனுக்கு
உடலிலுள்ள வாதம் என்கிற ஒருதோஷம் நீங்கி நோயின்றி வாழ்வான்.
அவனே தான் கழிக்கும் சிறுநீரை பவ வண்ணங்களில் கழிக்காது தெளிந்த ஒடைநீர்
போல போகச்செய்தால் உட லில் ஏற்படும் நோய்களின் வேகம் மட்டுப்படும். அதேபோல
வாயில் சுரக்கும் உமிழ்நீரை (ஜீரண நீரை) அதிக நேரம் தங்கவிடாது அதற்குப் போட
வேண்டிய உணவைப் அவ்வப்போது போட்டு விட அந்த ஜீரண திரவத்தின் வீரியம் மட்டுப்
பட்டு இரைப்பையை அரித்து சேதப் படுத்தாது. அதனால் பல நோய்கள் அனுகாதோடும்
இந்த மூன்றையும் ஒருவன் சீராக செய்ய காலன் வேளைத் தவறிவந் தால் அவனை
உடலானது விரட்டி யடிக்கும் என்கிறார் சித்தர்.

எழுதியவர் : பழனிராஜன்l (17-May-20, 3:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 357

மேலே