நிற்காதா

தவித்த வாய்க்கே
தண்ணீர் இல்லாதபோது
நாளை அஸ்தியைக் கரைக்க
நதிகள் இணையாதா ?
தண்ணீர் பஞ்சம் தீராதா?
பங்காளிகள் பங்கு அளித்தால்
சரித்திரம் உருவாக
சாத்தியமாகாதோ !

நதிகள் உண்டு
பல வழிகள் உண்டு
அரசியல் கழிவுகளைக்
கொட்டிக் குறுக்கே
தடுக்காதிருந்தால்
தண்ணீர் வராதா ?—இல்லை
எங்கள் கண்ணீர் தான்
நிற்காதா?

எழுதியவர் : கோ. கணபதி. (17-May-20, 7:24 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

மேலே