ஒற்றுமை

ஒற்றுமை


பஃறொடை வெண்பா

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை


ஓரம் ஒதுங்கி வழிவிடான் மற்றவர்க்கு
சோர மனையாள் அனுசரிப்பான் பாவியும்
சேரா எகிறிப் குதிப்பன் சோம்பேறி
மாற்றான் விருப்பம் மறுப்பான் மதியாது
பாராட்டாத் தாழ்த்துவன் பாரறி வாளி
தயாராய் நிற்பான்தன் தாய்வர செல்வான்
கயவன் சகுனம் பயந்தவர்க் கென்பான்
அயலார் நடத்தை கயவாநீ பார்ப்பதேன்
மூடநம்பிக் கைமறுக்கும் மூடா அறிவாயா
பட்டறிவால் ஏற்பட்டக் கஷ்டத்தால் சொன்னதிது
அப்பன் தமையன் மகள்மனைவி ஆவாளா
அம்மைத் தமக்கை மகள்மனைவி ஆவாளா ?
ஆவாள் வெளிமுஸ்லீம் முன்கிருத்த வத்திலும்
ஆயினும் யேற்பாயா தங்கை மனையாளாய்
ஆயிரம் வேற்றுமை எந்த மதத்திலும்
ஆர்ப்பரிக்கும் எந்த அறிவாளன் ஏற்பான்சொல்
ஆய்ந்துபார் விஞ்சானம் சேர்த்து எதையுந்தான்
ஆய்வுசொல்லும் நம்முன்னோர் காரணமாய் செய்தார்
தமிழரையே தாக்குமிவன் அல்ல தமிழனே
மூடரல்ல முன்மனிதர் தேடிப்பார் கருத்தையும்
கேளும் விழித்தமுகம் ஏதென்பர் கேடுவர
கேள்நான் விழித்தமுகத்தால் நானும் கவனமுடன்
மெல்லசென்றும் எகிறிவீழ்ந்தேன் பைக்கில்

எழுதியவர் : பழனிராஜன்l (17-May-20, 8:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 769

மேலே