அம்மா, அம்மா 😭

அம்மா, அம்மா 😭

அம்மா, அம்மா
என்னடா செல்லம்
இன்னும் எவ்வளவு தூரம்
அது இன்னும் பல மயில் இருக்கு
உன் கால் வலிக்கல
ரொம்ப வலிக்கிறது செல்லம்
வெய்யில் வேற தலைசுற்றுது
ஏம்மா இப்படி நடந்தே
எல்லாம் நேரம் டா செல்லம்
உனக்கு பசிக்குதா
ஆமா டா கண்ணு இருட்டுது.
எங்கே போகிறோம்
நம்ம சொந்த ஊருக்கு
ஏம்மா
இங்க ஏதோ நோயாம்.
பிழைப்பு இல்லை
அதான் நடந்தே நம்ம சொந்த ஊருக்கு
பஸ், டிரையின் இல்லையா
எதுவும் ஓடல
ஓடினாலும் அதுல போக காசு இல்லடா செல்லம்
என்னை வேற நீ வயித்துல சுமக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல.
அப்படி எல்லாம் இல்லடா செல்லம்
நான் உன் சாப்பாட்டில் பாத சாப்பிடறேன் இல்ல.
நீ அப்படி எல்லாம் சொல்ல கூடாது
நீ என் உயிர்
நான் ஆனா, பெண்ணா
ஆனோ, பெண்ணோ
நீ என் தங்கம்.
நான் சொல்லவா நான் யார் என்று.
வேனாம் செல்லம் இன்னும் இரண்டு நாளில் நீ யாருன்னு தெரியிம்.
பாவம்மா நீ
நான், மட்டும் இல்ல , ஏழையாக பிறப்பதே பாவம் தான்.
அம்மா, அம்மா நான் வெளியே வர போரேன்.

"என்னங்க, இடுப்பு வலிக்கிறது "
"ஒன்னும் முடியில"
" அந்த ரோட்டோரம் படுத்துகிறேன்"
" என்னங்க உங்க வேட்டிய மறைந்து பிடிங்க"
" அம்மா, முடியலையே, ஆண்டவா..........
ஆண்டவா........

" ஏய், புள்ள பையன் பொறந்துயிருக்காண்டி"
" இந்தா, பால் கொடு"

அம்மா, அம்மா, மண்ணிச்சகம்மா
என்னடா செல்லம்
நடு ரோட்டிலேயே ....
எல்லாம் விதி.
எனக்கு பசிக்குது
எங்கிட்ட அவ்வளவு தாண்டா பால் இருக்கு.
அம்மா, அம்மா, ( சிசு பாலுக்கு அழுகிறது)
அவள் எதற்காக கண்ணீர் விடுவாள்.
பால் கொடுக்க முடியாதுதற்காவா.
இந்த சிசுவை எப்படி காபாற்ற போகிறோம் என்பதற்காகவா.
ஆண்டவனே எங்கே உள்ளாய்.
அவள் அழுது,அழுது கண்ணீரும் வற்றிவிட்டது.
அவளையும், அந்த சிசுவையும் யார் காபாற்றுவார்.

- பாலு.

எழுதியவர் : பாலு (17-May-20, 9:28 am)
சேர்த்தது : balu
பார்வை : 59

மேலே