இதயம் கல்லாகி

தீண்டாமை கண்ட மனிதன் தனிமையில்
வேண்டாத பல நட்பு ஒருமையில்
தூண்டாதே சகவாசம் இனியும்
தொட்டிடத்தான் பரவிவிடும் நோயும் ,
ஆனாலும் மனிதன் திக்கற்றவன்,
திணறுகின்றான் தேடலிலே,
வழி தெரியாப் பாலகன் போல்
வாடுகின்றான் வெதும்பலிலே,
வேதனையின் விளிம்புக்கே செல்கின்றான் .
இனியும் பொறுத்திருக்க முடியாது
வீறு கொண்டு எதிர்நீச்சல் போடுகின்றான்,
படைத்தவன் ஏனோ தயங்குகின்றான் ,
பாவிமகன் மனிதன்
தன்னைப் பற்றியே சிந்திக்கின்றான்
தன்னால் முடியும் என்றான், தவிக்கின்றான்,
படைத்தவன் பற்றி சிந்திக்க
மனிதனுக்கு நேரமில்லை
எல்லாம் நோக்கும் இறைவன்
இதையும் நோக்குகின்றார்
இதயம் எல்லாம் மனிதனுக்கு கல்லாகி விட்டதா/
ஏக்கத்துடனும், இரக்கத்துடனும் இறைவன்,

எழுதியவர் : பாத்திமாமலர் (17-May-20, 11:52 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : ithayam kallaagi
பார்வை : 151

மேலே