என் காதல் கண்மணி
என் காதல் கண்மணி...
25 / 12 / 2024
என் காதல் கண்மணி
என் வாழ்வின் பொன்மணி
உன்னை கண்டால்
எந்தன் நெஞ்சில்
கவிதை வெள்ளம்
பொங்குதே...ஏ ஏ
பெருகுதே
காதல் சொல்லும் கவிதை நூறாயிரம்
உந்தன் விழியில் கண்டேன் பா ஆயிரம்
உந்தன் குரலில் கேட்கும் பாராயணம்
இதயவீணை மீட்டும் தேன்பாசுரம்.
என்னைத் தேடி நீயும் வந்தாலே
எந்தன் தோட்டம் நிறைய பூப்பூக்குமே
உந்தன் முகத்தை கண்ணால் கண்டாலே
வானின் நிலவும் நாணி முகம் மறைக்குமே