அழியாத பரிசு இது
வெண்நீலப் புடவையை
மண்ணில் பரப்பியது போல்
அழகிய நீள் ஆற்றில் மிக
அதிசயமான நீள் அலைகள்
நீருக்குள் மீனைக் கண்டு
அதை சேமிக்க ஆசை கொண்டு
வானுக்கும் நீருக்கும் இடையே
வலம் வரும் கொக்கு கூட்டம்
போருக்கு போக நிற்கும்
புயமிகு தமிழனைப் போல
அடுக்கடுக்காய் நிமிர்ந்து வரும்
அதிசயப் கப்பல்கள் இங்கே
விண்ணை கிழித்து போகும்
வானுர்தி போலே தன்னைத்தானே
மிஞ்சிப் பறக்கும் அன்னப்பறவை கூட்டம்
நெஞ்சை பறிகொடுக்கும் காட்சி அது
இயற்கை அன்னையவள் தந்த
இனிமையான அழியாதபரிசுஅது
ரசிப்பதற்கு காசா பணமா?
மனமது இருந்தால் பிறக்கும் பல கனவு