மாயாஜாலம்

மனிதனின் மனம்
கண்ணாடி போல்
அதில் சந்தோஷங்களும்
துயரங்களும்
மாயாஜாலங்கள் போல்
வந்து வந்து போகும்...!!

ஆனால்
அந்த மனதை
கடும் சொல் என்னும்
கல் கொண்டு தாக்கினால்
உடைந்து விடும்...!!

அதன் பிறகு
அந்த மனதில்
எந்த மாயாஜாலத்தையும்
காண முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Nov-20, 6:57 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 719

மேலே