அருகருகே இருந்தும்

அருகருகே படுத்திருந்தும்
ஒருவருக்கொருவர் பேசவில்லை
அவரவர் எண்ணங்களில்
மூழ்கி அருகருகே இருந்தார்கள்
ஒருவேளை !

இவன் அவளை சுற்றி
வந்த நாளை நினைத்திருப்பானோ
அவளோ தன் வயிற்று
பசிக்கு ஏதாவது கிடைக்குமா?
இந்த எண்ணத்தில் கூட
இருந்திருக்கலாம் !

பாதையின் ஓரத்தில்
வயது முதிர்ந்த இருவரும்
படுத்து கிடந்ததையும்

அருகே விரித்திருந்த
சாக்கு பையில் காசை
விட்டெறிந்து

பார்த்தும் பாராமல்
பலபேர் அவசரமாய்
வந்து கொண்டும்
போய்க்கொண்டும்
இருந்தார்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Nov-20, 6:53 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : arukaruke irunthum
பார்வை : 57

மேலே