நிரலன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  நிரலன்
இடம்:  கற்பனை உலகம்
பிறந்த தேதி :  01-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2014
பார்த்தவர்கள்:  1716
புள்ளி:  112

என்னைப் பற்றி...

தேடுகிறேன் என்னை நான்,
தொலைந்த இடம் தெரியாமலே....!

அடையாளங்கள் நினைவில் உண்டு,
ஆனால் போதுமானதா என தெரியவில்லை...!

என்ன என்ன அடையாளங்கள் தெரியும்?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்....!

கற்பனை மட்டும் தான் இவன் உலகம்,
உலகம் மொத்தமும் கற்பனை...!

பொய்கள் பேச தெரியாதவன்,
உண்மைகளை மறைக்க தெரிந்தவன்,
கைப்பேசி இவனது ஆறாம் விரல்,
கணிபொறி இவனுக்கு ஆக்ஸிசன்,
எப்பொழும் கிறுக்குவான்,
சில நேரம் கவிதை, சில நேரம் நிரல்கள்,

கவிதை என்று சொல்லிக்கொள்வான்,
பிறரிடம் கவிதையை சொல்லிக்கொல்வான்...!

வகுப்பறையில் அவளை மட்டும் தான் பார்த்திருப்பான்,
கவிதைகள் மட்டும் தான் கிறுக்குவான்.

'அறிவாளி' நண்பர்கள் வைத்த பெயர்,
'கோமாளி' உலகம் உணர்த்திய பெயர்!

புத்தகம் கொஞ்சம் படித்தவன் தான்,
வாழ்க்கை புத்தகம் தொலைத்தவன் தான்.

அடையாளங்கள் போதும் தான் - தேடிவிடலாம்,
தொலைந்தவன், தொலைந்தவனாகவே இருக்கட்டுமே...!

http://mathiazhagan.com/

http://niralan-kirukalgal.blogspot.in/

http://niralan-kuviyangal.blogspot.in/

http://niralan-sirukathaigal.blogspot.com/

http://naan-enapadupavan-yaar.quora.com/

என் படைப்புகள்
நிரலன் செய்திகள்
நிரலன் - எண்ணம் (public)
16-Jul-2021 8:22 pm

தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குமாறு stackexchange இணையத்திற்கு எடுத்துரைத்துள்ளேன். 50 பேர்களுக்கும் மேல் பின்தொடர்ந்தும், 40க்கும் மேற்பட்ட கேள்விக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றால் மட்டுமே தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குவார்கள். இந்த இணையத்தின் மூலம், நாம் அணைத்து தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்ட முடியும். நாம், நமது நண்பர்கள் தமிழுக்காக செய்துவரும் அனைத்தையும் உலகின் பார்வைக்கு கொண்டுவரமுடியும். கீழ் உள்ள இணைப்பில் சென்று உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


tamil.stackexchange.com

மேலும்

நிரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2018 12:20 am

கண்சிமிட்டி, கண் இமைக்கும் நொடியில்
கரைந்தே சென்றாளோ கன்னி அவள்.
மூழ்கி நீந்தி மூச்சு திணறி தேடுகிறேன்,
என் மனம் எனும் கடலில்.
அலைப்பாயும் என் மனகடலில்.

ஏதேதோ சிந்தனைகளில்
மறந்து போகிற
வரிகளை எல்லாம்
தேடி தேடியே மூழ்கிப்போகிறேன்.

நீந்தி பழக்கமில்லாத கடலதில்
மூச்சு காற்றுகள் வட்டமாய் செல்ல,
விளையாடுவேனோ அதனோடு
நானும் சிறுப்பிள்ளையாய்.

கரையில் நின்றபடியே,
சிப்பிக்கு ஆசைப்படும் சிறுவனும் நானே.
தூண்டிலில் சிக்கி தவிக்கிற
சிறு உயிரும் நானே.
பசியுடனே வட்டமாய் பறந்திடும்,
பருந்தும் நானே.

பார்வைக்கு எட்டா தூரம்
அந்த கன்னியும் நீந்திட,
பார்வைகள் இழந்து
தடுமாறி நானும்
மீண்

மேலும்

நிரலன் - நிரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2017 9:12 pm

முடிவற்ற கனவுகளில் தொலைந்துபோகவே
தொலையும் இடம் தேடுகிறேன்.
விடைகள் தேடியே
வினாக்கள் தொலைந்தது.
உன்னை மட்டுமே நிரப்பிய இதயமதில்
போதை நிரப்ப நிரப்ப, வெற்றிடமே.
யாரும் செல்லா பாதையதில்
யாரை தேடுகிறேன்? இன்னொரு என்னையோ?

மேலும்

நன்றி தோழி. 26-Jun-2018 10:37 am
அருமையான வரிகள் தோழரே 18-Jun-2018 3:15 pm
நிரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2017 9:45 pm

மடிக்கணினி திறந்து,
மட மடவென கவிதை தீட்டி பழக்கமில்லை
ஏதோ ஒரு தருணத்தில்,
தூரத்தில்,
நான் இதுவரை பார்த்திராத
எனை கவரும் பெண்ணின் புன்னகை
உன் சாயலை காட்டும் பொழுது,
திணறுகிறது என் வார்த்தை கவிதையாய்...

மேலும்

நிரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2017 9:37 pm

அன்று நீ கவிதை எழுத சொல்வாய்,
நான் வரிகளற்று நிற்பேன்...
சிரிப்பாய்,
மௌனமே கவிதை என்பாய்...

மேலும்

நிரலன் - இராகுல் கலையரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2016 1:19 pm

தற்போது பெண்களுக்கு பெண்ணுரிமை உள்ளதா?
ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்படுகின்றனரா?
இல்லையேல் தாழ்த்தப்படுவது யார்?

மேலும்

முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் பார்க்கமுடிகிறது. பல ஆண்டு அடிமைத்தனத்தை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமுடியாது. 04-Dec-2016 8:02 pm
என் உரிமை நீ - என்று அன்பை பொழியும் ஆண்களும் இங்கு உண்டு. உன் உடைமைக்காகவே நான் என்று - வெட்டி எறியும் பெண்களும் இங்கு உண்டு. பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள், இங்கு உண்மையில் பெண்கள் ஓட்டுக்காகவே முளைக்கும் அங்கங்கு, அவ்வப்போது. நமக்கெதுக்கு இது. மனித உரிமை பத்தி பேசுங்களேன். 01-Dec-2016 10:53 pm
பொட்டு* 01-Dec-2016 10:21 pm
இதற்கு நேரடியான பதில் கூறுவது கடினம். பெண்ணுரிமை என்ன என்பதை ஒரு ஆண் விளக்குகிறான் என்றால் அதில் முழுமையான பெண்ணுரிமை இருக்க வாய்ப்பு இல்லை. தாலி, மெட்டி, நெத்தி போட்டு, விதவை கோலம், பர்தா என பல பெண்ணடிமை சின்னங்கள் இன்றும் இருக்கும் பட்சத்தில் பெண்ணுரிமை இன்றளவும் ஏட்டில் மட்டுமே இருப்பதாக தான் தோன்றுகிறது. 01-Dec-2016 10:20 pm
நிரலன் - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2016 4:10 pm

ஒரே இரவில் பணத்தை செல்லாது என்று அறிவித்த அரசுக்கு

ஏன்?

ஒரே நாளில் மதுஒழிப்பு சாத்தியம் இல்லாமல் போனது?.

மேலும்

சிந்திக்க வேண்டிய கருத்து... ஆனால் நம் 'குடி'மகன்களுக்கு இது புரிவதில்லையே!! 13-Dec-2016 1:44 pm
மது ஒழிப்பு அவரவர் வீட்டில் இருந்து ஆரம்பமாக வேண்டும், கருப்புப்பண ஒழிப்பு அரசாங்கத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும், இரண்டும் எப்படி ஒன்று????? 27-Nov-2016 10:32 am
செல்லாது என்று அறிவித்தாலும். அதற்கு நிகரான இன்னொரு பணம் கிடைக்கிறது, மது ஒழித்தால் அதற்கு நிகராக வேறு எதை தருவது என்பதே அரசின் திகைப்பு??? மேலும் வீட்டில் உள்ளவர்களே திருத்த முடியாத போது அரசு என்னதான் செய்ய முடியும்????? 27-Nov-2016 10:30 am
ஹாஹ்ஹா,ஹா.ஹ்.ஹா,! யாரும் கைவைக்க மாட்டாங்க..! வச்சா தூக்கி அடிச்சிருமில்லே.. தேர்தல்லே.! 22-Nov-2016 6:41 pm
நிரலன் - கிச்சாபாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2016 11:25 pm

சாதி ஒழியாமல் சமத்துவம் மலருமா?

மேலும்

சாதியை ஒழிப்பது மிகவும் சுலபம். ஆனால், அதை அழிக்கத்தான் யாரும் முன்வருவதில்லை.காரணம், சுய நலம்! எடைக்கு எடை சமம் என்பது வியாபாரம். ஆனால் மனிதனை மனிதன் தாழ்த்துவது மானுடத்திற்கே அவமானம்! 26-Dec-2016 10:51 pm
முற்றிலும் உண்மை. குறிப்பாக தமிழகத்துக்கு வெளியே சட்டம் இயற்றுபவர்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ள பெரும்பாலோரே சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்களா. 14-Dec-2016 9:39 pm
சாதி அமைப்பும் சாதியும் காலத்தை வென்று நிற்பவை. அழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அழிக்க முடியாதபடி செய்துவிட்டார்கள். 14-Dec-2016 9:33 pm
சாதி என்பது வெறும் சாயமே! அதை பூசிக்கொண்டு நடிப்பதினால் யாருக்கிங்கு இலாபம்? ஒரு நாள் வெளுத்து போகும் போது அதற்கு மதிப்பு இருக்காது என்பதை உணர்ந்த பின்னும் வேஷம் கட்டிக்கொண்டுதான் திரியுது. காரணம் சுய நலம்! அது இருக்கும்வரை சமத்துவம் இங்கு மலராது. சுய நலத்தை ஒழித்தால் போதும் சாதி என்பதன் பொருள் சாதனை ஆகும். ஆரியனும் செத்தால் நாறும். 13-Dec-2016 10:19 pm
காதலாரா அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Dec-2015 12:21 am

காட்சிப் பிழைகள் - 16 - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுழன்று சுற்றும் வெளியில்
பார் செதுக்கும் விழியால்
எனை யாரென ...பார் ...
அது காதல் யுக வேர் ...

குறுகிக் கிடக்கும் உன்னிடை
திருகிச் சிவந்த என்விரலில்
பெருகி அவிழும் வரிகளை
பருகி மடிந்தது நம்மிதழ்...

பிரிவின் பின் ..திரையில்
விரியும் முத்த முடிவில்
உன் மொத்த உருவத்தால்
ஓங்கி அறைகிறாய்
என்னிரு கன்னம் வீங்க ...

தேகத்தின் ரோமத்தில்
மோகத்தின் வேகத்தை
வானத்தின் கோபமாக்கி
பாலைவன தாகத்தில் சுடுகிறாய்...


உனக்கான கவிதைகளை..
படிக்காமல் புதைப்பதை விட ..
என்னுடல் புதைக்கையில்
ஏதேனும் எழுதி வி

மேலும்

வாழ்த்துக்கள். கவிதை அருமை ! 18-Jan-2016 2:30 pm
அழகிய சொல்லாடல் நிறைந்து கவிதை தாலாட்டுகிறது ! 18-Jan-2016 10:18 am
யப்பா என்னவொரு வீரியமான சொல்லாடல்.. அசத்தி இருக்க ராஜ்.. இதுதான் தம்பி...யின் எழுத்து.. இத்தொடரில்.. நீயுமொரு கஸல் நாயகன்.. .. வா தம்பி.. கட்டியணைத்து பாராட்டுகிறேன். நாடி நரம்பு சதை புத்தி எல்லாம் காதல் உணர்வேறிய ஒரு கவிஞன் எழுதிய இப்படைப்பு.. சபாஷ் சபாஷ் சபாஷ்.. 12-Jan-2016 9:46 pm
மகிழ்ச்சி தங்கச்சி 07-Jan-2016 5:39 am
நிரலன் - நிரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 1:25 am

ஒருவிதமான இனம் புரியாத வேதனை என்னை ஆட்கொண்டிருந்தது. இப்படி எல்லாம் இதற்கு முன்பு இல்லை. இது எல்லாம் கடந்த ஒரு மாதமாக தான். கண்ணாடி முன்பு நின்று மார்ப்பிலுருந்த தையல் வடுவை பார்த்துக்கொண்டிருந்தேன். மணி 3.30 இருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு என் அம்மாவை எனது அறைக்கு வரவைத்திருக்க வேண்டும்.

"என்ன கண்ணு? துங்கலையா?"

"இல்லமா. மனசு சரியில்ல."

"என்னப்பா? என்னாச்சி?"

"கார்த்தி-யோட அப்பா, அம்மா-வ பாக்கனும் போல இருக்குமா."

"சரிப்பா, காலில போய் பாரு. இப்ப தூங்கு. தண்ணி கொண்டுவரவா?"

"நான் எடுத்துகிறன்மா. நீங்க போய் தூங்குங்க."

"சரிப்பா. நீயும் தூங்கு. கார்த்திய பத்தியே யோசிச்சுட்டு இரு

மேலும்

நிரலன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2015 3:08 pm

வீட்டின் தெரு வாசலிலேயே நின்றிருந்த அஞ்சலையையும் அவள் அருகில் நின்றிருந்த சுகந்தியையும் அலட்சியமாகப் பார்த்த பொன்னம்பலம், “என்ன அஞ்சலை?“ என்று கேட்டார்.

“இந்த மாச கடன் பணத்த கொண்டாந்திருக்கிறேங்க...“ தயங்கித் தயங்கிச் சொன்னாள் அஞ்சலை.
“நா கொஞ்சம் வேலையா இருக்கேன். உள்ளே அம்மாகிட்ட குடுத்துடு.“

“சரிங்க ஐயா“ என்று சொன்னவள் வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லை புறத்திற்குச் சென்றாள். “அத்தை... ஏன் நேரா வீட்டுக்குள்ள போகாம இப்படி சுத்திக்கினு போறீங்க?“ என்று கேட்ட சுகந்தியைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, “இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பேன்னு தான் என் கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன்.

மேலும்

Mikaum nanru... 26-Aug-2015 5:29 pm
நிரலன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2015 5:08 pm

இரவு நேரம் 8 மணியை தாண்டியிருந்தது. புகையிரதத்தில பயணித்த களைப்புடன் வெள்ளவத்தையில் உள்ள தமது மகளின் தங்குமிடத்துக்கு விரைந்து கொண்டிருந்தனர் பானுவின் பெற்றோர்கள்.
அங்கு மகள் இல்லாததால் மகளின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டனர்.
"அம்மா... இன்னமும் பார்ட்டி முடியலை. திறப்பு பக்கத்து பிளாட் ஆன்டி ட கொடுத்திருக்கிறன். வாங்கிக் கொள்ளுங்க..." தொடர்பை துண்டித்தாள் பானு.

"என்னவாம் உண்ட மகள்...." - கணவர் கணேசலிங்கம்.
"இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாளாம். எங்களை உள்ள போயி இருக்கட்டாம்..." - மனைவி தேவி

"இது அவள் சொன்னாளா.... இல்லை நீயா சொல்லுறியா... இப்பவே நேரம் 8 தாண்டிட்டு. பிள்ளை வீட்டில இல்லை..

மேலும்

மிகவும் பிற்போக்குதனமான கதை. 19-Aug-2015 9:50 am
தங்கள் கருத்துக்கு நன்றிகள் 09-Jul-2015 4:02 pm
இதை அனைவரும் கற்று கொள்ள வேண்டும் தோழரெ........... 06-Jul-2015 12:40 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் தோழமை. 05-Jul-2015 12:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (61)

பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
அனிதா

அனிதா

Ramanathapuram
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (61)

சிவா

சிவா

Malaysia
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (61)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
SARAVANABALA

SARAVANABALA

MUSIRI
மேலே